பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

நாட்டைச் சேர்ந்த தலங்கள் என்றால் இப்பொய்கை நாட்டின் எல்லை ஒருவாறு அறியப்பெறும், இவ்விராசேந்திர சிங்க வளநாடு காவிரியின் வடகரைநாடு என்பதும் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்துக் கல்லெழுத்தால் அறியலாம்.

பொய்கைநாடு கிழவன் அலுவல்

இப்பொய்கைநாட்டின் தலைவனாக இராசராசன் I காலத்தில் விளங்கியவன் பொய்கைநாடு கிழவன் எனப் பெற்றன். இவன் இயற்பெயர் ஆதித்தன் சூரியன் என்பதும், தென்னவன் மூவேந்தவேளான் என்பது இவன் சிறப்புப் பெயராக இருத்தல் வேண்டும் என்பதும் அறியத்தகும். இப்பொய்கைநாடு கிழவன் முதலாம் இராசராசனின் 9-ஆவது ஆட்சியாண்டாகிய கி. பி. 985ல் திருச்சோற்றுத் துறையில் சில அறங்களைச் செய்துள்ளான். அக்கல்லெழுத்தில் “பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான்” என்று குறிக்கப் பெற்றுள்ளான். முதல் இராசராசனது 29-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக்களிலும் முதல் ராசேந்திரசோழனது 3-ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக்களிலும் (கி. பி. 1015ல்) அதாவது முதல் இராசேந்திரன் பட்டத்திற்கு வந்த ஆண்டில் காணும் பல கல்லெழுத்துகளிலும் ”ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்க்கு ஸ்ரீ கார்யம் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான்” என்று குறிக்கப்படுவதால் தஞ்சையில் இராசராசேச்சரம்[1] எடுப்பித்த பிறகு இராசராச-


  1. கி. பி. 1009ல் இராசராசேச்சுரத்திருப்பணி முடிவுற்றதாதல் வேண்டும் - உலகநாதபிள்ளே.