பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

சோழனால் ஸ்ரீகார்யம் செய்கின்ற அலுவலில் நியமிக்கப்பட்டிருந்ததாக அறியப்பெறுகிறது. இவன் சிறந்த சிவபக்தி யுடையவன். இவன் தன் வாழ்நாளில் சிவனடியார்களிடத்தும் அரசனிடத்தும் ஒப்பற்ற அன்பு பூண்டொழுகியவன். ஆதலின், இவனது சிறந்த பண்புகளையறிந்து, இராசராசன் இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியஞ்செய்யும் வேலையில் இவனை அமர்த்தினன் என்னலாம்.

திருச்சோற்றுத்துறைக் கல்லெழுத்து

முதலாம் இராசராசனின் 9-ஆம் ஆட்சி ஆண்டில் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்குப் பொய்கைநாடு கிழவன் பொன்னின் வெண் சாமரைக்கை-1க்கு, நிறை 19; கணபதியார்க்கு இராசந்தி விளக்கு ஐந்தனுக்கும் நொந்தா விளக்கினுக்கும்... ... ... வைத்தகாசு 10; (இங்ஙனம் பல தருமங்கள் சொல்லப்பட்டுள்ளன); 'யாண்டு 10-ஆவது ... ... ... திருப்பதியம் பாடுவார்க்கு நெல்லு 70 கலத்துக்கு வைத்தபொன் 33; துர்க்கையார்க்குத் திருவமிது நெல்லு 20க்கு வைத்தகாசு 10...' இரண்டு திருவிழாவுக்குப் பெருந்திருவமிர்து செய்ய நெல்லுக்கு வைத்தகாசு 12, என்ற இக்கல்லெழுத்துப் பகுதியினின்று கி. பி. 985-ல் திருச்சோற்றுத்துறை மகாதேவர் கோவிலுக்குப் பொய்கை நாடு கிழவன் சில அறங்கள் செய்துள்ளான் என்றும் அறியப்படுகிறது. இதில் திருப்பதியம் பாடுவார்க்குப் பொன் அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

மூவர் படிமங்களை எழுந்தருளுவித்தமை

திருச்சோற்றுத் துறையில் தேவாரம் பாடுவதற்கு நிபந்தம் அளித்த பொய்கைநாடு கிழவன், தஞ்சை இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியம் செய்கின்ற அலுவல்