இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
ஏற்றுக்கொண்டதும் தேவார மூவருடைய படிவங்களைத் தஞ்சை இராசராசேச்சுரத்தில் எழுந்தருளுவித்து அவற்றுக்கு அணிகலன்களும் அளித்தான் என்பதை இரண்டு கல்லெழுத்துக்களினின்றும் அறியலாம்[1].
- விளக்கம் வருமாறு:-
1. நம்பி ஆரூரர்-சுந்தரமூர்த்தி சுவாமிகள் படிவம்
பாதாதி கேசாந்தம் பதினெழுவிரல் இரண்டு தோரை[2] உயரமும் இரண்டு திருக்கையும் உடையவராய்க் கனமாக[3] எழுந்தருளுவிக்கப்பெற்றது; இது செப்புப் பிரதிமம்; இவர் நின்ற பத்மம் இரு விரலரை உயரமுடையது; இதனோடுங்கூடச் செய்த பீடம் எண் விரல் சம சதுரத்து மூவிரலே இரண்டு தோரை உயரம் உடையது.
இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது
ருத்ராக்ஷத் தாழ்வடம் ஒன்றில் பொன்னின் சுரி 56-ம் ருத்ராக்ஷம் 56-ம் உள்பட நிறை 8-கழஞ்சே 9– மஞ்சாடி[4] ; விலை காசு 25.
குறுவானியக் குடியாகிய[5] பரகேசரிபுரத்து நகரத்தார். கொடுத்தது