உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

5. அரசன் அரசியர் பிரதிமங்கள்

பொய்கைநாடு கிழவன் தன் அரசனிடத்தில் மிக்க அன்பு உடையவன் என்பது இராசராசனது படிவத்தையும், அவனது பெருந்தேவியாகிய ஒலோகமாதேவியார் படிவத்தையும் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளுவித்ததினின்று அறியப் பெறுகின்றது.

இராசராசன் பிரதிமம்

பாதாதிகேசாந்தம் ஒரு முழமே நால்விரலரை உயரத்து இரண்டு திருக்கையுடையராக எழுந்தருளுவிக்கப் பெற்றது; இவர், கல்வெட்டில் பெரிய பெருமாள் என்று குறிக்கப் பெறுகிறார்; இவர் எழுந்தருளி நின்ற பீடம் ஐவிரலே இரண்டு தோரை உயரங்கொண்டது; இதனோடுங்கூடச் செய்த பீடம் 11 விரல் சமசதுரத்து ஐவிரலே ஆறு தோரை உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடுகிழவன் கொடுத்தன

திருக்கைக்காறை ஒன்று, பொன்கழஞ்சே ஆறு மஞ்சாடியும் மூன்றுமா ஆக இரண்டினால் பொன் 2 கழஞ்சு 2 மஞ்சாடி ஆறுமா. திருக்குதம்பை ஒன்று, பொன் எட்டு மஞ்சாடி ஏழு மாவாக இரண்டினால் பொன் கழஞ்சு இரண்டு மஞ்சாடி நான்கு மா.

6. தேவாரதேவர் திருமேனி[1]

இப்பிரதிமம் பெரிய பெருமாள் திருமுன் வைக்கப்பட்டிருத்தல் கூடும். “பெரிய பெருமாளுக்குத் தேவார


  1. கடவுள் வடிவம் : ‘‘திருமேனி‘‘ என்றும், மக்கள் வடிவம் ‘பிரதிமம்‘ என்றும் வழங்கப்பெறும்.