67
தேவராக எழுந்தருளுவித்த தேவர்” என்று குறிக்கப் பெறுதலின் இராசராசன் தேவாரம் ஓதுங்கால் ஒரு விக்கிரகத்தை எதிரில் எழுந்தருளுவித்து ஓதுவது பழக்கம்போலும் என்ற செய்தியை அறிகிறோம். இத்திருமேனி சந்திரசேகரர் எனப் பெறுவார். இவர் ஐவிரலே இரண்டு தோரை உயரத்து நான்கு திருக்கை யுடையவர்: இத்திருமேனி பித்தளையால் ஆயது; இவரோடுங் கூடச் செய்த பத்மம் 1 விரல் உயரமுடையது; பீடம் இருவிரலே நாலு தோரை சமசதுரத்து ஒரு விரலுயரமுடையது. ஒரு விரல் சுற்றில் கனமாகச் செம்பால் செய்த பிரபை ஒன்றும் இத்திருமேனியைக் கவித்து இருந்தது.
7. ஒலோகமாதேவியார் பிரதிமம்
இருபத்திருவிரலே இரண்டு தோரை உயரத்து இரண்டு திருக்கை யுடையராகக் கனமாக எழுந்தருளு விக்கப்பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் ஐவிரல் உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் ஒன்பதிற்று விரல் சமசதுரத்து ஐவிரலே இரண்டு தோரை உயரமுடையது.
இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன
திருக்குதம்பை ஒன்று, பொன் ஏழு மஞ்சாடியும் குன்றியாக இரண்டினால் பொன் முக்கால் கழஞ்சு. திருக்கைக் காறை ஒன்று, பொன் கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் மூன்றுமா. திருக்கைக்காறை ஒன்று, பொன் கழஞ்சே எட்டுமா.
விளக்குகளை அளித்தமை
மேற்குறித்த ஆறு பிரதிமங்களும் ஒரு திருமேனியும் இராசராசசோழனது 29-ஆம் ஆட்சியாண்டில் எழுந்-