பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

ஆட்சியாண்டில் தரப்பெற்ற ஆனைமங்கலக் கல்லெழுத்தில்[1] கூறப்பெற்றுள்ளது. அவ்வொப்பந்தம் பின்வருமாறு :-


'நரசிங்கப் பெருமானடிகள்[2] தம்முடை நிலத்தால் சபையார்க்குக் கொடுக்கவேண்டிய ஈழக்காசு பதினெட்டு. இத்தொகையின் மூன்றில் ஒருபங்காகிய ஆறு ஈழக் காசுகளை வட்டியாகப் பெறும்பொருட்டு அருணிதி கலியன் சபையார்க்கு இறைகாவலாகப்[3] பதினைந்து ஈழக்காசுகளை அளித்தான்.


ஒரு ஈழாக்காசுக்குத் திங்கள் ஒன்றுக்கு வட்டி புத்தக்கம் ; பதினைந்து ஈழாக்காசுகளுக்குத் திங்கள் ஒன்றுக்கு 3 புத்தக்கம்.[4] இது ஆண்டொன்றுக்கு 45 புத்தக்கம் ஆகிறது. ஒரு ஈழக்காசுக்கு 7, புத்தக்கம் எனில் 45 புத்தக்கம் 6 ஈழாக்காசு ஆகிறது. இங்ஙனம் 15 ஈழக்காசுக்கு 6 ஈழக்காசு வட்டி.


நரசிங்கப் பெருமானடிகள் சமையார்க்கு இன்னும் கொடுக்கக் கடவ 12 ஈழாக்காசுகளும் நீக்கப்பெற்றன.


இனி ௸ இறைகாவலாகக் கொடுத்த 15 காசினால் ஊருடையான் குளமான கலியனேரி[5] என்ற (ஏரியுள்ள)


  1. S. I. I. Vo1. III, Part III No 106.
  2. நரசிங்கப் பெருமானடிகள் - ஆனைமங்கலத் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த திருமால் திருநாமம்.
  3. இறைகாவல் - இறைதிரவியம் - வரிப்பணத்துக்குப் பதிலாகச் செலுத்தப்படும் முதற் பொருள்.
  4. புத்தக்கம் - புதிய அக்கம்; அக்கம் - ஒரு நாணயம்.
  5. கலியனேரி - அருணிதிகலியன் பெயரால் அமைந்த ஏரி.