பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தருளுவிக்கப் பெற்றன. அடுத்த ஆண்டில் அதாவது (இராசேந்திரனின் 3-ஆவது ஆட்சியாண்டு எனக் குறிக்கப்பெற்ற) இராசேந்திரன் I பட்டத்துக்கு வந்த ஆண்டில் பொய்கைநாடு கிழவன் தான் எழுந்தருளுவித்த நம்பியாரூனார்க்கும், திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் 41 பலம் நிறையுள்ள இருப்பு நாராசத்தோடு கூடிய தரா[1] நிலை விளக்கு ஒன்றும், பெரிய பெருமாளுக்கு[2] 120 பலம் நிறையுள்ள இருப்பு நாராசத்தோடு கூடிய தராநிலைவிளக்கு ஒன்றும், 4. பலம் எடையுள்ள வெண்கல மடல் ஒன்றும் அளித்துள்ளான்.[3] வெண்கல மடல் இப்பிரதிமங்களை வணங்க வருவார்க்குத் திருநீறு அளித்தற் பொருட்டுக் கொடுக்கப்பட்டது போலும் !

சிறுத்தொண்டர் மெய்ப்பொருளார் வரலாறுகளைப் போற்றியமை

பொய்கைநாடு கிழவன், செயற்கருஞ் செயல்கள் செய்த சிறுத்தொண்டர், மெய்ப்பொருள் நாயனார் முதலியவர்களுக்குத் தஞ்சைப் பெரிய கோயிலில் படிமங்களை எழுந்தருளுவித்தான் என்று இரண்டு கல்லெழுத்துக்களினின்று அறிகிறோம்.

8. சிறுத்தொண்டர்[4]

சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரினர் ; பரஞ்சோதியார் எனும் இயற்பெயரினர் ; இவர்


  1. தரா-எட்டுப் பாகம் செம்பும், ஐந்து பாகம் காரீயமும் கலந்த உலோகம்.
  2. பெரிய பெருமாள்-இராசராசன் I
  3. S. I. I. Vol II, Part II, No 41.
  4. S. I. I. Voi. II No. 43.