69
பல்லவ அரசனுக்குத்[1] தானைத் தலைவராய் அமர்ந்து வாதாபி வரையிலும் சென்று வாதாபியை அழித்துப் பல பொருள்களையும் கவர்ந்து அரசன் முன் கொணர்ந்தார்.[2] அரசன் இவரது சிவபக்தியை அறிந்து இவர்க்கு ஓய்வு அளித்தார். இவர் திருச்செங்காட்டங்குடியில் இருந்து அடியார்களுக்குத் திருவமுது அளித்துவரும் தொண்டில் ஈடுபட்டிருந்தார். இவரது வாழ்க்கைத் துணைவியார் திருவெண் காட்டுநங்கை எனப் பெறுவர். ஒரு நாள் இவரது அன்னதானச் சிறப்பைச் சோதிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான் பைரவக்கோலம் தாங்கிவந்தார்; அடியாரை நோக்கி ஆறு திங்களுக்கு ஒரு முறையே உண்பதாகவும் பிள்ளைக்கறி இடுவதாயின் உண்பதாகவும் கூறினார். தொண்டானார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் தன் மனைவியோடு உசாவினார் , தம் ஒரு மகவாகிய சீராளரைச் சமைத்து அடியார்க்கு உணவளிக்க உறுதி கொண்டார் ; வாளால் மகவரிந்து ஊட்டினார் ; பைரவராக வந்த இறைவனும் காட்சியளித்தார்
இவ்வரலாற்றில் பங்குபெறும் சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளதேவர், பைரவமூர்த்தி, காட்சிகொடுத்த இறைவர் ஆகிய ஐவருக்கும் பிரதிமங்களும், திருமேனியும் பொய்கைநாடு கிழவன் எழுந்தருளுவித்தான் ; விளக்கம் வருமாறு :—