உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திரள்மணிவடம் ஒன்று, பொன் மூன்று மஞ்சாடியும் குன்றி : ருத்ராக்ஷக்காறை ருத்ராக்ஷம் நீக்கிப் பொன் அரைக் கழஞ்சே மஞ்சாடி.

4. திருவெண்காட்டு நங்கை

பாதாதி கேசாந்தம் 15 விரல் உயரத்து இரண்டு கை உடையவர்.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது

பட்டைக்காறையிற் கோத்த தாலி உட்படப் பொன் ஒன்பது மஞ்சாடியும் குன்றி.

5. சீராள தேவர்

பாதாதி கேசாந்தம் 12 விரல் உயரத்து இரண்டு கையுடையவர்.

இவர்க்குப் பொய்கை நாடு கிழவன் கொடுத்தன

சுருக்கின வீரபட்டம் ஒன்று, பொன் நான்கு மஞ்சாடி, திருக் குதம்பைத் தகடு இரண்டு, பொன் மஞ்சாடியும் குன்றி, பட்டைக்காறையும் சூலமும், பொன் அரைக் கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றி.

பிரதிமங்கள் மூவரும் கின்ற பீடம் : 23 விரல் நீளத்து ஏழு விரல் அகலத்து எண் விரல் உயரத்துப் பத்மத்தொடும் கூடியது.

இவ்வைவருக்கும் திருமேனிகளும் பிரதிமங்களும் எழுந்தருளுவித்ததை நோக்கின் சிறுத்தொண்டர் திருநாள் தஞ்சை இராசராசேச்சரத்தில் நிகழ்த்தவேண்-