பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டும் என்று பொய்கைநாடு கிழவன் கருதினன்போலும் என்று நினைக்க இடம் தருகிறது.

9. மெய்ப்பொருள் நாயனார்[1]

மெய்ப்பொருள் நாயனாருடைய படிவத்தைப் பொய்கைநாடு கிழவன் எழுந்தருளுவித்திருக்கிறான். இந்நாயனாது படிவத்தை வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டில் இவர் பெயரைக் கூறாமல் ’’தத்தா நமரே காண்’’ என்ற மிலாடுடையார் படிவம் என்று கூறியுள்ளமையை நோக்கப், பொய்கைநாடு கிழவன் நாயன்மார்களுடைய வரலாற்றில் ஈடுபாடு உடையவனாய் இருந்தான் என்பதும், நாயன்மார்களுடைய வரலாறுகளைக் கூர்ந்து அறிந்திருந்தான் என்பதும் அறியப்பெறும்.

நாயனாரை வஞ்சனையாகக் கொல்லவந்த முத்த நாதன், தான் எண்ணியதையே முடிக்கத், தத்தன் என்ற வாயிற் காவலன் முத்தநாதனைக் கொல்ல வாளோச்சின்னான். நாயனர் ’’தத்தா நமரே காண்’’ என்று கூறித் தத்தனை விலக்கினார். நாயனார் வாக்கில் முகிழ்த்த இச்சொற்றாெடர், நம்பியாண்டார்நம்பி திருவந்தாதியில் தவழ்ந்து, கல்லெழுத்தில் பதிந்தவாற்றை அறிந்தால் சோழவரசர் ஆட்சியில் இருந்த தமிழரது சைவ சமயப் பற்றுத் தெற்றென விளங்கும்.

தத்தா நமரே காண்

பாதாதிகேசாந்தம் இருபதிற்றுவிரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகச் செய்யப்பெற்றது,


  1. S. I. I. Vol II Part II No 40. இவ்வாசிரியர் வெளியிட்ட ’இலக்கியக்கேணி’ என்ற நூலுள் ’தத்தா நமரே காண்’ என்ற கட்டுரை காண்க.