உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

சோழன் காலமுதற் கொண்டு மூன்றாம் குலோத்துங்கன் காலம் முடியப் ’பாண்டியனை இருமடி வெங்கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், மூன்றம் இராச ராசனுடைய 18-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களில் கிராம சிகாமணிச் சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப் பெற்றுளது. வீர ராசேந்திர சோழன் காலம் வரையில் இது செயங்கொண்ட சோழ மண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு மணிமங்கலம் என்றும், குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து செயங் கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணிமங்கலம் என்றும், மூன்றாம் இராசராச சோழனுடைய கல்வெட்டில் புலியூர்க் கோட்டம் குலோத்துங்க சோழவளநாடு என்ற பெயருடையது என்றும் அறிய வருகிறது. இந்நாளைய இராச கோபாலப் பெருமாள், முன்னாளில் ஸ்ரீமத் துவராபதி என்றும், ஸ்ரீமத் துவராபுரி தேவர் என்றும், வண் துவராபதி என்றும் ஸ்ரீ காமக்கோடி விண்ணக ராழ்வார் என்றும், கல் வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளார்.

பெற்றாேர்

இம்மணிமங்கலத்தில் செயங்கொண்ட சோழப் பிரமாதிராசன் என்ற பெயருடைய சேனைத்தலைவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். இவன் இரண்டாம் இராசேந்திரனுடைய நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டிலும் (கி. பி. 1054), வீர ராசேந்திர சோழனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் (கி. பி. 1068) குறிக்கப் பெற்றிருக்கிறான் . இவனுடைய தந்தை மஞ்சிப் பயனாரான ஜெயசிம்ம குலாந்தகப் பிரம்ம மாராயர் என்று சொல்லப்பட்டார் (S. I. I. Vol III Part I No. 30.) இவ-