பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

னுடைய தாய் காமக்கவ்வையள் என்ற பெயருடையவர் (s. 1. I. Vol III Part 1 No. 29).

சேனாபதி

வீர ராசேந்திரனுடைய கல்வெட்டில், ”இவ்வூர் ஜிவிதமுடைய சேனாபதிகள் ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராஜர்” என்று இவன் குறிக்கப்பட்டுள்ளான். சயங்கொண்ட சோழன்[1] என்பது முதலாம் இராசாதிராசனுடைய சிறப்புப் பெயர்களுள்ளும் ஒன்று. இதனை - மனு நெறி நின்று அசுவமேதம் செய்து அரசு வீற்றிருந்த ஜெயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க் கோவிராச கேசரிபன் மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் ’’ (s. I. I. Vol III Part I No. 28) என்ற இரண்டாம் இராசாதி ராச சோழனுடைய 29-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டினின்று அறியலாம் (கி. பி. 10.46). எனவே இப்பிரம்மாதி ராசன் செயங்கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இராசாதி ராசனுடைய சேனைத்தலைவர்களுள் ஒருவன் என்பதும், இராசா திராச சோழனுடைய போர்கள் சிலவற்றில் கலந்து கொண்டு சோழ வரசனுக்கு வாகை சூட்டியிருத்தல் வேண்டுமென்பதும், இவனுடைய பேராற்றலை மதித்து இவனுக்குச் செயங் கொண்ட சோழப் பிரம்மாதி ராசர் என்ற பட்டப் பெயரை இராசாதிராசன் அளித்திருத்தல் கூடும் என்பதும் அறிதற் பாலன. இவனுடைய தந்தையும் ”ஜெயசிம்ம குலாந்தகப் பிரம்ம மாராயர்” எனப்படுதலின், அவரும் மேலைச் சளுக்கியர்களோடு போர்


  1. முதலாம் இராசராச சோழனுக்கும் இச்சிறப்புப் பெயர் உண்டு