இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
நிலப்பகுதி விலைக்கு வாங்கப்பெற்றது. இவ்வொப்பந்தப்படி அருணிதி கலியன் இக்குளத்தைக் கல்லி ஆழமாக்கலாம் ; கரை நீளமாக்கலாம் ; கரையை உயர்த்தலாம் ; குளத்தில் வேண்டிய அளவு நீரை நிறைத்துக் கொள்ளலாம்.
இக்குளத்தின்கீழ் நீர்நிலன்[1] இருவேலியை அருணிதி கலியன் விலைக்குக் கொண்டான். இதிலிருந்து வந்த வருமானம் அஞ்ஞாழிக்காலால்[2] முன்னூறு கலம் நெல் ஆகும். இதில் 150 கலம் நரசிங்கப் பெருமானுக்கு மூன்று சந்தியும் திருவமுது செய்விக்க வேண்டும். எஞ்சிய 150 கலமும் பிற்குறித்தவாறு செலவு செய்யவும் ஏற்பாடு :-
உத்தம அக்கிரமாகத்[3] தேவர்[4] அமிர்து செய்யும்பொழுது வேதப் பிராமணர் நிசதம்[5] ஐவர்க்கு அமுது செய்விக்க வேண்டும் ; பத்தெட்டுக் குத்தல் அரிசி [6] நாள் ஒன்றுக்கு இருநாழி ; கறிமூன்று : தயிர் நாழி ; நெய் இருசெவிடு[7] ; காயிலை[8] இரண்டு ;.