கொள்ளுமாறு கொடுத்து விடுவதுண்டு (திரு. பண்டாரத்தார்-சோழர் வரலாறு, பாகம் 111). எனவே, செயங் கொண்ட சோழப் பிரமாதி ராசனுக்கு அவன் செய்த பெருந்தொண்டுகளைப் பாராட்டி முதலாம் இராசாதி ராச சோழன் ஜீவிதமாக மணிமங்கலத்தில் நிலமளித்தனன்.
பிரமாதிராசன் தருமம்
மேலே குறித்த கல்வெட்டுப் பகுதியினின்று மஞ்சிப் பயனாருக்கு மணிமங்கலத்தில் 4450 குழி நிலம் இருந்தது என்றும், மணிமங்கலம் சபையார் ஸ்வம் (பொருள்) கொண்டு இறையிலியாக்கினர் என்றும் அறிய வருகின்றது. வீர ராசேந்திரனின் 5-ஆம் ஆட்சியாண்டில் மனிமங்கல சபையார், சேனாபதிகள் ஜெயங் கொண்ட சோழப் பிரமாதிராஜர் ஸ்ரீமத்துவராபதி ஸ்ரீ காமக்கோடி விண்ணகராழ்வார்க்கு அந்நிலத்தை அர்ச்சனாமாக[1]மாகக் கொடுத்தனர். இதில் கமுகம் தோட்டம் 250 குழி என்றும், இதனை இவன் முன்னதாகவே விலைக்கு வாங்கி யிருந்தான் என்றும் தெரிய வருகிறது.
காமக்கவ்வையள் தருமம்
இவ்வம்மையார் செயங்கொண்ட சோழப் பிரமாதி ராசனின் தாயார். இவ்வம்மையாரிடம் இராச சூளா மணிச்சதுர்வேதி மங்கலத்தார் ஸ்வம் கொண்டு மணிமங்கலத்துத் தென்பிடாகை அமண்பாக்கத்து நிலத்தை இறையிலியாக்கி ஸ்ரீமத் துவராபதியான ஸ்ரீ காமக்கோடி விண்ணகராழ்வார்க்குக் கொடுத்தனர். இச்செய்தி இரண்-
- ↑ அர்ச்சனாபோகம் : கோயிலுக்கு அர்ச்சனே முதலியவற்றிற்காகக் கொடுக்கப்படும் இறை (வரி)யிலி நிலம்.