பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

டாம் இராசேந்திரனுடைய 4-ஆம் ஆட்சியாண்டுக்குரிய மணி மங்கலத்துச் சாசனத்தினின்று அறியப்பெறும். அமண்பாக்க மென்பது மணிமங்கலமாகிய இராசசூளாமணிச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகை; அதாவது அச்சதுர்வேதி மங்கலத்துத் தெற்குப்பகுதியிலிருந்த உட்கிடையூர் (Hamlet). அமண் பாக்கம் என்பது இந்நாளைய மணிமங்கலத்துக் கோயிலுக்குத் தெற்கிலுள்ள அம்மணம் பாக்கம் ஆகும். ஸ்வம் என்பது பொருள் என்று பொருள்படும். இது சொம்மு என்ற தெலுங்கச் சொல்லோடு தொடர்புடையதாகக் காணப் பெறும். (சொம்மு அணிகலன்). இச் சொல் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளால் சொம் என்ற உருவில் இரண்டிடங்களில் எடுத்தாளப் படுகிறது. முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம், செய்யுள் 2 ‘‘கும்பாதி‘‘ என்று துவங்கும் பாடலிலும், காசிக் கலம்பகம் செய்யுள் -35 ‘‘அம்மனே’’ என்ற முதற் குறிப்புடைய பாடலிலும் இச் சொல் பயின்றுள்ளது.

தெலுங்கரா ?

முதல் இராசராச சோழன் காலமுதற் கொண்டு கீழைச் சளுக்கியரோடு சோழர்கள் மணமுறையால் பிணிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிந்ததே. ஆகவே தெலுங்க நாட்டிலிருந்து போந்தவருட் சிலர் சோழர்களுக்குத் தானைத் தலைவர்களாகவும், மண்டலத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். மஞ்சிப்பயன் என்ற ஒருவன் வீர ராசேந்திரனுடைய மேலைச் சளுக்கியப் போர்களில் 1065ல் நடந்த 4-ஆவது போரில் கலந்துகொண்ட சளுக்கிய தண்ட நாயகரில் ஒருவனாகக் காணப்படுகிறான். எனவே மஞ்சிப் பயன் என்ற பெயர் ஆந்திரர்களுக்குரிய பெய-