பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கருணாகரத் தொண்டைமான்

முதற் குலோத்துங்க சோழன்

தாய் வழியால் சோழர் பரம்பரையைச் சேர்ந்தவனும், தந்தை வழியால் கீழைச் சாளுக்கிய பரம்பரையைச் சேர்ந்தவனுமாகிய முதற் குலோத்துங்க சோழன் கி. பி. 1070 முதல் கி. பி. 1120 வரையிலும் அரசு வீற்றிருந்த சோழ மன்னனாவான். இவன் அரசனானதும் மேலைச் சளுக்கியர்களோடு ’துங்கபத்திரைச் செங்களத்திடைப்’ போர் செய்து வென்றான்; ’வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை ஏவிப்’ பாண்டியர் ஐவரை வென்றான் ; பின்னர்ச் சேரருடன் போர் நடத்தி, விழிஞத்திலும் காந்தளுர்ச் சாலையிலும் வெற்றிகொண்டு, கோட்டாற்றை யழித்து, அங்கு நிலைப்படையொன்று நிறுவினான் ; இங்ஙனம் சோழரது ஆட்சியின் தென்னாட்டெல்லை காட்டிப் பின்னர் வடக்கே தென் கலிங்கப் போரை நிகழ்த்தினான். இத் தென் கலிங்கப் போர், கி. பி. 1096 ல் நடைபெற்றது. இம் முதற் கலிங்கப் போர் இவன் மகனாகிய விக்கிரம சோழனால் நிகழ்த்தப் பெற்றது. பின்னர் கி. பி. 1112 - ல் நிகழ்த்தப் பெற்றதே வட கலிங்கப் போர். இப்போர்நிகழ்ச்சியைத் திருச்சிமாவட்டம் சீனிவாச நல்லூரில் உள்ள இவனது 42 - ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், (608 of 1904), தஞ்சை மாவட்டம் ஆலங்குடியிலுள்ள 45 - ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் (S. IV No. 445) அறிவிக்கின்றன. செயங்கொண்டார் என்னும் புலவர் பெருந்தகையார்

6