களைக் கடந்து, வடகலிங்க நாட்டை யாவரும் அடைந்தனர். கருணாகரனின் படைகள், சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின. இதனைக் கண்ணுற்ற வடகலிங்கக் குடிகள் தம்மரசனாகிய அனந்தபன்மனிடம் முறையிட்டனர். கலிங்க அரசனும் வெகுண்டு “கானரணும் மலையரணும், கடலரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி என்பதனை நன்கு அறியாது சோழரது சேனை வருகின்றது போலு’ மென்று தடம் புயங்கள் குலுங்க நக்கான். அது போழ்து உடனிருந்த எங்கராயன் என்னும் அமைச்சன் சோழப் படையின் வலிமையையும், கருணாகரன் தலைமை பூண்டு படை வருதலையும் கூறித் ’திறை செலுத்தலே முறை’ என்னும் உட்கருத்தோடு உரைத்தனன். அனந்தபன்மனோ அமைச்சனது உரையை இகழ்ந்து பேசித் தன் சேனைகளுக்குப் போர் தொடங்குமாறு ஆணையிட்டனன் : கலிங்கப் படைகளும் போர்க்குப் புறப்பட்டன. போர் கடுமையாக நடந்தது ! கருணாகரன் தன் யானையைப் போரில் முந்திச் செலுத்தினான். “புரைசை மதமலை ஆயிரம் கொடு பொருவம்” என்று அரசன் உரை செய்த ஆண்மை அழித்துக் கலிங்க மன்னனது படைகள் ஒதுங்கின. கலிங்கர் படையிலுள்ள யானை குதிரை முதலியவற்றைக் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். அனந்த பன்மன் தலை மறைவானான். ’எழுகலிங்கர் தம் இறையையும் கொடு பெயர்தும்; அவன் இருந்துழி அறிக’ என்று கருணாகரன் பணிக்க, ஒற்றர்கள் கலிங்க வரசன் மறைந்திருந்த மலைக்குவட்டைக் கண்டறிந்து அதனை முற்றுகையிட்டனர். அவ்விடத்தைச் சுற்றி, வேலாலும் வில்லாலும் வேலி கோலி விடியும் வரை காத்திருந்து அனந்த பன்மனைச் சிறைப் பிடித்தனர். கலிங்க வீரர்கள்
பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/85
Appearance