பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


ஊர்

செயங்கொண்டார் வண்டைமன் எனக் கருணாகரனைக் கூறியுள்ளமையால், இவன் வாழ்ந்த ஊர் ’வண்டை’ என்ற பெயருடையதாக இருத்தல் வேண்டுமென அறிகிறோம். வண்டை என்பதைத் தொண்டை நாட்டிலுள்ள ’வண்டலூர்’ என்று டாக்டர் ’உல்விடி’ போன்றவர்கள் கருதினர். (S. i. 1.1 P. 133)தொண்டை மண்டல சதகமும் இவனைத் தொண்டை நாட்டின்னாகவே எண்ணுகின்றது:-

”பண்டையோர் நாளையில் ஓர் ஏழ் கலிங்கப் பரணிகொண்டு செண்டையும் மேருவில் திட்டுவித்தான் கழற்செம் பியன் சேய் தொண்டைநன்னாடு புரக்கின்ற கோனத்தி தோன்ற லெங்கள் வண்டையர் கோனங் கருணாகரன் தொண்டை மண்டலமே?”

(தொ. ம. ச. 92)

தொண்டை நன்னாட்டில் அரசியல் தலைவனாக இருந்தமை பற்றி இவனைத் தொண்டை நாட்டினனாக இப்பாடல் கூறுகின்றது. எனினும் இவன் ஊராகிய வண்டை என்பது சோழவள நாட்டைச் சேர்ந்த ஓரூர் என்று காஞ்சிபுரக் கல்வெட்டால் அறியப் பெறும். அச்சாசனம் பின் வருமாறு :-

“ஸ்வஸ்தி ஸ்ரீ கோஇராசகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று-ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில்நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி யுடையான் வேளான கருணாகரனான, தொண்டை-