பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு” (S. I. I. Vol. IV No 862).

இக் கல்லெழுத்தில் ‘கருணாகரத் தொண்டைமான் சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரி உடையான்‘ என்று கூறப்படுதலால் இவனூர் சோழநாட்டு ‘வண்டாழஞ்சேரி‘யா யிருத்தல் வேண்டும் என அறியலாம். இந்நாளில் இவ்வூர் ‘வண்டுவாஞ்சேரி‘ என்ற பெயரில் கும்பகோணத்திலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெரு வழியில், திருநறையூருக்கும் திருச்சேறைக்கும் இடையில் அமைந்துள்ளது.

இவன் மனைவி

மேலே காட்டிய கல்வெட்டிலிருந்து இவன் மனைவி அழகிய மணவாளனி மண்டையாழ்வார்‘ என்ற பெயருடையவர் என்று அறியலாம். முன்னாளில் பெருந்தரத்து அதிகாரிகள், அரசர்கள், அமைச்சர்கள் போன்றாேருடைய மகளிரை ‘ஆழ்வார்’ என்ற சிறப்புப் பெயரால் வழங்கும் மரபு பற்றி இவ்வம்மையாரும் ஆழ்வாரென்று வழங்கப் பெற்றார். இவ்வம்மையார் காஞ்சிபுரத்து வரதராசப் பெருமாள் திருக்கோயிலுக்குத் திருநுந்தா விளக்கு’ வைத்ததாக அறியப் படுகிறது.

திராட்சாராமக் கல்வெட்டு

கோதாவரி மாவட்டம் திராட்சாராமத்தில் காணப் பெறும் கல்வெட்டொன்று முதற் குலோத்துங்க சோழனின் 33-ஆம் ஆட்சியாண்டிற்குரியது (349 of 1893; S. 1. 1. IV 1239). இக் கல்வெட்டால் கருணாகரனின்