பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

தாலம்[1] ஐந்து; வட்டில்[2] ஐந்து; ஒட்டூட்டி[3] ஒன்று: சட்டுவம்[4] ஒன்று.

அடுவான் ஒருவனுக்கு நாடோறும் நெல் ஐந்து நாழி; ஆறு திங்களுக்கு ஒரு புடவை[5]

மேற்குறித்தவாறு நரசிங்கப் பெருமானுக்கு நிவேதனம் செய்விக்கவும், வேதப்பிராமணர்க்கு அன்னம் பாலிப்பு நடத்தவும் ஏற்பாடு.

தொடங்கவேண்டிய காலம் : இவ்வாட்டை கற்கடக நாயிற்று[6] வெள்ளிக்கிழமைபெற்ற ஆயிலியத்துநாள் குரிய கிரகண வேலை குறைகிராணம்[7] பற்றின. அன்று முதலாக நடத்தப்பெற வேண்டும் என்றும், சிறீ காரியம்[8]


  1. தாலம் - தாம்பாளம்.
  2. வட்டில் - கிண்ணம் (CUP).
  3. ஒட்டூட்டி - தண்ணீர் வார்க்கும் செம்பு போலும் (?)
  4. சட்டுவம் - அகப்பை.
  5. புடவை - ஆண்கள் உடுக்கும் ஆடையும் புடவையெனப் பெற்றது. (தமிழ்ப்பொழில் - ஏழாம்துணர் - பக்கம் 552 - 3 ல் காண்க.)
  6. கற்கடகநாயிறு - ஆடி மாதம்.
  7. குறைகிராணம் - குறைகிரகணம்: நிறைகிரகணம் என்று பாடமிருப்பின் சிறக்கும்.
  8. சிறீகாரியம் - சிரீகாச்சியம் - சிரிகாற்றியம் என்று ஸ்ரீகாரியம் என்ற சொல் பிழையாக இக் கல்லெழுத்தில் காணப்பெறுகிறது.