பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

வன்’ என்றும், ’சக்கரம் போன்றவன்’ என்றும் கூறியுள்ளார். அத்தாழிசை பின்வருமாறு :-

‘’தண்ணா ரின்மலர்த் திரள் தோள் அபயன்
        தான் ஏவிய சேனை தன்க்(கு) அடையக்
கண்ணாகிய சோழன சக்கரமாம்
       கருணாகரன் வாரண மேற்கொளவே.‘’ (1 1-52)

திருமால் தம்பகைவர்மேல் சக்கரத்தைச் செலுத்துவது போலத் திருமாலின் அம்சமாகிய சோழனும், கலிங்கப் பகையை அழிக்கக் கருணாகரனாகிய சக்கரத்தை ஏவினானென்பது இத்தாழிசையின் கருத்தாம். வடகலிங்க வேந்தன் அனந்த பன்மனுக்கு அவன் மந்திரி எங்கராயன் அறிவுரை கூறிய காலத்தில்,

‘‘கண்டு காணுன் புயவலி நீயுமத்
தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே‘‘

என்னுமிடத்தும் கருணாகரனைச் சோழவேந்தனது சக்கரமாக உருவகித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மாயூரத்துக்கு அருகில் ‘சோழ சக்கர நல்லுர்’ என்ற வூர் இருக்கிறது. அஃது கருணாகரத் தொண்டைமானின் சிறப்புப் பெயராகிய ‘சோழன சக்கரம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருத்தல் கூடும்.

உடன் சென்ற பிற தானைத் தலைவர்கள்

வடகலிங்கப் போருக்குச் சென்ற தானைத் தலைவர்களுள் கருணாகரனது தமையனாகிய ‘பல்லவர்க் கரசு‘ என்பானும் ஒருவன் என்பது முன்னர்க் கூறப்பட்டது.

‘‘வாசி கொண்டரசர் வாரணங் கவர
       வாண கோவரையன் வாண்முகத்