உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தூசி கொண்டு முடிகொண்ட சோழன் ஒரு
    சூழி வேழமிசை கொள்ளவே” (11-54)


என்ற வித்தாழிசையால் ‘வாணகோவரையன்‘ என்பானும், ‘முடிகொண்ட சோழன்‘ என்பானும், துணைப்படைத் தலைவராகச் சென்றனர் என்பது புலப்படும்.

வாணகோவரையன் என்பான் ‘சுத்த மல்லன் உத்தம சோழனாகிய லங்கேசுவரன்‘ எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறுகிறான். இவன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மேலப் பழுவூரில் செங்கற் கோயிலைக் கற்றளியாக அமைத்தான்; அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் எனப் பெயரிட்டு இறையிலி நிலங்கள் வழங்கினான் (389 of 1924, 392 of 1924). இதனால் இவனுடைய பக்தியும், அரசன்பால் கொண்ட பேரன்பும் தெளிவாக அறியப்படும். இவ்வாணகோ வரையனை விக்கிரம சோழனுலாப் பின்வருமாறு கூறும் :-

‘‘புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க
ஒல்லாத கூற்றம் உயிர்வாங்கப் - புல்லார்வந்(து)
ஆங்கு மடமகளிர் தத்தம் இழைவாங்க
வாங்கும் வரிசிலைக்கை வாணனும்.‘‘ (விக். 151-154)

முடிகொண்ட சோழன் என்பான் தென்னார்க்காடு வட்டம் சித்தலிங்க மடம் கல்வெட்டொன்றில் குறிக்கப் பெறுகிறான் இது விக்கிரம சோழனுடைய நான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும் (383 of 1909). இதினின்று ஆடவல்லான் வாசுதேவனான முடி கொண்ட சோழ மூவேந்த வேளான்‘ எனப்படுபவன் ஓய்மா நாட்டுப் பண்டித கோஷ்டிச் சதுர்வேதி மங்கல-