91
மான முன்னூர் என்ற வூரவன் என்றும், ஆடவல்லான் வாசுதேவன் என்ற இயற்பெய ருடையவன் என்றும் அறியப்பெறும் (1. M. P. - S. A. - 786)
பிற போர்கள்
முதற் குலோத்துங்கனது 33-ஆம் ஆட்சி ஆண்டிற்குரிய திராட்சா ராமக் கல்வெட்டினின்று இவன் செய்த போர்களைப் பற்றி அறிய முடிகிறது. அதில் கலிங்கத்தை அழித்ததும், கங்கனைப் போரில் வென்றதும், கோசலர் படையின் உதவியால் தேவேந்திர வர்மன் என்பவனையும் பிறரையும் அடக்கியமையும், ஒட்டர தேசத்து எல்லையில் இராசேந்திர சோழனது வெற்றித் தூணை நிறுவியமையும் கூறப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய விளக்கங்கள் நன்கு தெரியவில்லை. எனினும் கலிங்கப் போருக்குமுன் பல போர்கள் நிகழ்த்திக் கருணாகரத் தொண்டைமான் சிறந்து விளங்கினான் என்பதை அறிவிக்க இக் கல்வெட்டொன்றே சாலும்.
விக்கிர சோழனாட்சியில்
முதற் குலோத்துங்கனுக்குப்பின் அரசனான விக்கிரம சோழனாட்சியிலும் கருணாகரத் தொண்டைமான் வாழ்ந்திருந்தா னென்பது ஒட்டக் கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவினா லறியப் பெறுகின்றது. அவ்வரிகள் பின்வருமாறு:-
—சேட்புலத்துத்
தென்னரும் மாளுவரும் சிங்களரும் கொங்கணத்து
மன்னரும் தோற்க மலைநாடர் — முன்னம்
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
மலையத் தருந்தொண்டை மானும் (விக். 134 - 137