பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92


விக்கிரம சோழனாட்சியில் இவன் அரசாங்க அலுவல்களிலிருந்து நீங்கி ஓய்வுபெற்ற நிலையிலிருந்திருக்கக்கூடும்.

இவனைப் பற்றிய பிற நூற் பாடல்கள்

கலிங்கத்துப் பரணிப் பிரதிகளிலும் தண்டியலங்கார மேற்கோள்களிலும் கருணாகரனைப் பற்றியும், கலிங்கப் போரைப் பற்றியும் சில பாடல்கள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு :-

“ஒருவர் ஒருவர் மேல் வீழ்ந்து வடநாடர்
அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து
தீத்தித்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க் கலிங்க மீதெழுந்த போது.”*

இது தண்டியலங்காரத்தில் சொற் பொருட் பின்வரு நிலையணிக்கு மேற்கோள்.

“கரடத்தான் மாரியும் கண்ணால் வெயிலும்
திரைவயிரக் கோட்டான் நிலவும் - சொரியுமால்
நீளார்த் தொடையதுலன் நேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.‘’

இது தண்டி-கருவிக் காரக வேதுவணிக்கு மேற்கோள்.

“கோட்டம் திருப்புருவம் கொள்ளா அவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச்சென்னி - நாட்டம்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கம்
சிவந்தன. செந்தித் தெற.‘’

இது தண்டி - குணக்குறை விசேட அணிக்கு மேற்கோள் ; வீர சோழியம் - அலங்காரப் படலத்தில் இதுவே அணிக்கு மேற்கோளாகவும் காட்டப்பட்டுள்ளது.