93
பின்வரும் பாடல்களிரண்டும் கலிங்கத்துப் பரணி கையெழுத்துப் பிரதிகளில் கண்டனவாகக் கூறப்படுகின்றன :-
’தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில்
விடங்குலவு வெள்வாள் விதிர்ப்ப - நடுங்கியதே
கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ
வாண்மே வியகலிங்கர் மண். ’’
’’சரநிரைத் தாலன்ன தண்பனி
தூங்கத் தலைமிசைச்செங்
கர நிரைத் தாரையும் காண்பன் கொலோ
கலிங்கத்து வெம்போர்
பொர நிரைத்தார் விட்ட வேழமெல்லாம்
பொன்னி நாட்டளவும்
வர நிரைத் தான்தொண்டை மான்வண்டை
மாநகர் மன்னவனே. ’’
கருணாகரன் செய்த கலிங்கப் போரைக் குறித்த கல்வெட்டுப் பகுதி பின்வருமாறு :
’’வடதிசை வேங்கை மண்டலம் கடந்து ஆங்கவர்
கலிங்க மேழும் கனலெரி பரப்ப
விலங்கல் போல விளங்கிய வேந்தர்
விட்டவெங் களிற்றொடு பட்டுமுன் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர
வருகோ மட்டையன் மாதவன் எதிர்பட
எங்க ராயன் இகலவ ரேச்சணன்
மாப்பிறளா மதகரி யிராசனன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
என்றிவ ரனைவரும்