பக்கம்:சோழர் வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

சோழர் வரலாறு



“அருமணவன், தக்கோலி, கிடராவன், காரகில் எனப்பட்ட அகிலின் தொகுதியும்; கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, துரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு[குறிப்பு 1], பொன் எழுத்து, குச்சரி, தேவகிரி, காத்துலம். இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி எனப்பட்ட துகிலின் தொகுதியும்; மலையாரம், தீ முரண் பச்சை, கிழான் பச்சை, பச்சை வெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி எனப்பட்ட ஆரத் தொகுதியும்: அம்பரேச்சம், கத்துரி, சவ்வாது, சாந்து குங்குமம், பனிநீர், புழகு, தக்கோலம், நாகப்பூ இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நீரியாசம், தைலம் எனப்பட்ட வாசனைத் தொகுதியும்; மலைச்சரக்கு, கலை, அடைவு சரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வாராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாறோக சூடன், சீனச்சூடன் எனப்பட்ட கற்பூரத் தொகுதியும் முதலாயின.”[1]

கைத் தொழில்கள்: சோழநாட்டில் பட்டாடை, பருத்தியாடை முதலிய நெய்யப்பட்டன; நூல் நூற்றல், பெண்கள் தொழிலாக இருந்தது. பாம்பின் பட்டை போன்ற பலவகை மெல்லிய ஆடைகள், பலநிற ஆடைகள் என்பன அழகுற நெய்யப்பட்டன. இக் கைத் தொழில் உறையூரில் சிறப்பாக நடந்ததென்று பெரிப்ளுஸ் கூறுதல் காண்க. கண்ணாலும் காண்டற்கரிய நுண்ணிய இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைகளும் உண்டென்று பொருநர் ஆற்றுப்படை அறைகின்றது. ஆடையின் உயரிய தன்மையை மணிமேகலையும் வியந்து கூறலைக் காணலாம்.


  1. இவ்வகைத் துகிலைத் தயாரித்தவர் தேவாங்கர் எனப்பட்டனர் போலும்!
  1. N.M.V. Nattar’s ‘Cholas’.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/136&oldid=1232953" இலிருந்து மீள்விக்கப்பட்டது