பக்கம்:சோழர் வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சோழர் வரலாறு



எனின், அச்செல்வாக்குப் பிற்கால (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு)க் களப்பிர அரசராற்றான் உண்டாகி இருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றன்றோ?

எனவே, இதுகாறும் கூறியவற்றால், களப்பிர அரசருள் முற்பகுதியினர் பெளத்த சமயத்தையும், பிற்பகுதியினர் சமண சமயத்தையும் வளர்த்தவர் என்பதும், அவற்றுள் சம்பந்தர் காலத்தில் சோழநாட்டில் பெளத்தமும் பாண்டிய நாட்டில் சமணமும் இருந்தது என்பதும் அறியத்தக்கன.

களப்பிரர்: சிம்மவிஷ்ணு முதலிய பிற்காலப் பல்லவர் பட்டயங்களிலும் மேலைச் சாளுக்கியர் பட்டயங்களிலும் பிறவற்றிலும் களப்பிரர் பெயர் காணப்படுகின்றது. எனவே, இப்புதிய மரபினர் தமிழ் நாட்டில் பேரரசர்களாகவும் சிற்றரசர்களாகவும் இருந்தனர் என்பது நன்கு தெரிகிறது.

சோழரைப்பற்றிய குறிப்புகள்: சோணாட்டு வரலாற்றில் இருண்ட பகுதியாகிய (கி.பி. 300 - கி.பி. 875) ஏறத்தாழ 6 நூற்றாண்டுகள் கொண்ட காலத்தில் சோழரைப் பற்றிப் பட்டயங்களும் இலக்கியங்களும் கூறுவன காண்போம்:

கி.பி. 400 முதல் 600 வரை கோச்செங்கணான்

இவன் சங்க காலத்தவனா?: இவன் சங்க காலத்தவன் என்பதற்குக் காட்டப்படும் காரணங்கள் இரண்டு: (1) 74ஆம் புறப்பாட்டின் அடிக்குறிப்பில் 'சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து ‘தண்ணிர் தா’ என்று, பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைகொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு எனவரும் செய்தி, (2) பொய்கையார் சோழன் மீது களவழிப்பாடிச் சிறைப்பட்ட அரசனை மீட்டார் என்பது களவழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/146&oldid=482796" இலிருந்து மீள்விக்கப்பட்டது