பக்கம்:சோழர் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

145



ஏடுகளின் ஈற்றில் எழுதப்பட்டுள்ள செய்தி. இவ்விரு கூற்றுகளையும் ஆராய்வோம்.

(1) மேற்சொன்ன 74-ஆம் செய்யுளில் கோச்செங்கணான் என்ற பெயர் இல்லை. அடிக்குறிப்பு, பாடிய புலவன் எழுதியதும் அன்று என்பது ‘உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு’ என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடலின் கீழ் உள்ள (பிற்காலத்தார்) எழுதிய அடிக்குறிப்புகள் பல இடங்களில் பொருத்த மற்றவை என்பது அறிஞர் நன்கறிந்ததே. சான்றுக்காக ஒர் இடம் குறித்துக் காட்டுதும்; புறம் 389ஆம் செய்யுளில் ‘ஆயுதங்களைப் போல நீ கொடுப்பாயாக’ என வரும் தொடரைக் கண்டதும், அஃது உவமையாகக் கூறப்பட்டது என்பதையும் கவனியாமல், ‘இஃது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு’ என்று அடிக்குறிப்பு வரையப்பட்டுள்ளது. இங்ஙனம் பிழைபட்ட இடங்கள் பல பொருத்தமற்ற அடிக்குறிப்புகள் பல - இத்தகைய அடிக்குறிப்புகளில் செங்கணானைக் குறிக்கும் அடிக் குறிப்பும் ஒன்றாகலாம். களவழிப்பாக்களைக் காண, கொச்செங்கணான் பேரரசன் என்பதும், வீரம் வாய்ந்த பகைவரைக் கொன்றவன்[1] என்பதும் போரில் கொங்கரையும் வஞ்சிக் கோவையும் கொன்றவன்[2] என்பதும் தெரிகின்றன. பாக்களால், இச்சோழனை எதிர்த்த வஞ்சிக்கோ (சேர அரசன்) போரில் கொல்லப் பட்டான் என்பது விளக்கமாகிறது. கணைக்கால் இரும்பொறை பற்றிய பேச்சே களவழியிற் காணப்பட வில்லை.

(2) முன்சொன்ன 74-ஆம் பாடல் தமிழ் நாவலர் சரிதையில், “சேரமான் கேைணக்கால் இரும்பொறை செங்கணானாற் குடவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது பொய்கையார்க்கு எழுதி விடுத்த பாட்டு” என்ற


  1. செ.6-16.
  2. செ. 14 & 39.


சோ. வ. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/147&oldid=482798" இலிருந்து மீள்விக்கப்பட்டது