பக்கம்:சோழர் வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

153



அம்மலை சோணாட்டின் தலைமுடி என்று கூறப்பட்டுள்ளது[1]. (4) இரண்டாம் புலிகேசி பல்லவரைக் கச்சிநகர்க் கோட்டைக்குள் புகவிட்டுச் சோழர், பாண்டியர், சேரர்க்கு நன்மைவரச் செய்தான் என்று அய்ஹோளே கல்வெட்டுக் கூறுகிறது. அதன் காலம் கி.பி. 634 ஆகும்[2].

(5) மஹேந்திரன் மகனான முதலாம் நரசிம்மவர்மன் சோழர் உள்ளிட்ட பல தென்னாட்டு அரசரை வென்றதாகப் பட்டயம் பகர்கின்றது.

(6) முதலாம் பரமேசுவரவர்மன் சோழநாட்டை வென்றதாகக் கூரம் பட்டயம் கூறுகின்றது[3].

(7) பரமேசுவரவர்மனை முதலில் தோற்கடித்த முதலாம் விக்கிரமாதித்தன் சோணாட்டு உறையூரில் தங்கியிருந்தான். அப்பொழுது 'கத்வல்' பட்டயம் விடுத்தான். அதன் காலம் கி.பி. 674. அவன் அதனில், தான் சோழ நாட்டை வென்றதாகக் குறித்துள்ளான்[4]. பல்லவரும் தமிழ் அரசரும் அவனைத் தாக்கி வென்றனர் என்று அவன் மகன் கூறியுள்ளான்.

(8) இரண்டாம் நந்திவர்மனை நந்திபுரத்தில் முற்றுகையிட்டவர் தமிழ் அரசர் என்று உதயேந்திரப் பட்டயம் உரைக்கின்றது[5].

(9) இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் சோழ, பாண்டியரைத் தெள்ளாற்றுப் போரில் முறியடித்தான்[6].

(10) பாண்டியன் கோச்சடையன் தணதீரன் சோழன் செம்பியன் என்று கூறிக்கொள்கிறான் என்று வேள்விக்குடிப் பட்டயம் விளம்புகிறது[7].

(11) முதலாம் வரகுண பாண்டியன் (மாறன் சடையன் - கி.பி. 765-816) தன்னைச் சோழ பாண்டியர் மரபில் வந்தவன் எனத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டிற் குறித்துள்ளான்[8].

  1. S,I.I. Vol.I. pp. 33-34.
  2. Ep. Indica, Vol. 6, p.6.
  3. S.I.I. Vol. I. p. 151.
  4. Ep. Ind. Vol. 10, p. 103.
  5. S.I.I. Vol. II, p.365.
  6. Ibid, II.p.508.
  7. Ep. Ind. Vol. 17, p. 291-293
  8. A.S. of India. 1903-4, p.275.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/155&oldid=1233165" இலிருந்து மீள்விக்கப்பட்டது