பக்கம்:சோழர் வரலாறு.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
170
சோழர் வரலாறு
 


சமயப்பணி: பராந்தகன் வீரநாராயணபுரம் போன்ற பல கிராமங்களை வேதம் வல்லார்க்கு முற்றுாட்டாக அளித்தனன். இவன் சிறந்த சிவபக்தன். புலியூர்ச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்று லீடன் பட்டயம் கூறுகிறது. இதனை விக்கிரம சோழன் உலாவும் ஆதரிக்கிறது.[1] இவன் நாட்டை 46 ஆண்டு அரசாண்டவன்; உத்தரமேரூர் அவையிற் பல சீர்திருத்தங்களைச் செய்தவன் ஏமகர்ப்பம், துலாபாரம் செய்து புகழ் பெற்றவன். இவன் ‘சிவனது பாத தாமரையில் உறையும் வண்டு’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் கட்டாது விட்ட பல கோவில்கள் இவன் காலத்தில் முற்றுப் பெற்றன. இவன் மகனான இராசாதித்தன் காளத்திக்கு அருகில் கோதண்ட ராமேச்சரமும் (கோதண்டராமன் என்று இராசாதித்தன் பெயர்) அரக்கோணத்திற்கு அருகில் கீழைப் பாக்கத்தில் உள்ள ஆதித்தேச்சரமும் கட்டினான். இவன் மனைவி பெயர் ஈராயிரவன் தேவி அம்மனார் என்பது. இவன் தன் பெயரால் காட்டுமன்னார் குடிக்கு அடுத்த ‘வீரநாராயண ஏரி’ (வீரான ஏரி-வீராநத்தம் ஏரி) எடுப்பித்தான், வீர நாராயணநல்லூர் (வீரான நல்லூர்), வீர நாராயண சதுர்வேதி மங்கலம் இவற்றை உண்டாக்கினான்; காட்டு மன்னார்குடியில் அளந்தேச்சுரர் கோவிலைக் கட்டினான்.[2]


4. பராந்தகன் மரபினர்
(கி.பி. 953-985)

பராந்தகன் மரபினர் : திருவாலங்காட்டுச் செப்பேடு லீடன் பட்டயம் முதலியவற்றை ஆராய்கையில், பராந்தகனுக்குப் பிறகும் அவன் காலத்தும் அரசுரிமை தாங்கியவர் இவர் என்பது தெரிகிறது.


  1. Kanni 16
  2. A.R.E. 1921. II. 27.