பக்கம்:சோழர் வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

173


 என்னும் சிற்றரசன் மகள் என்பர் சிலர். அரிஞ்சயன் மேல் பாடிக்கு அருகில் உள்ள ஆற்றுார் என்னும் இடத்தில் இறந்தான்.[1] அந்த இடத்தில் முதல் இராசராசன், இறந்த தன் முன்னோர்க்குப் பள்ளிப்படை (கோவில்) கட்டியதாகக் கல்வெட்டொன்று கூறுகிறது.[2] அரிஞ்சயன் தொண்டை நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுப் போர் நிகழ்த்தி, உயிர் இழந்தனன் போலும்! ‘இவன் பகைவராகிய காட்டுக்குத் தீயை ஒத்தவன்’ என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்தலால், இவன் போர்த்திறம் பெற்றவன் என்பது தெளிவாகிறது. இவன் ஒரே ஆண்டு அரசனாக இருந்து இறந்தான்.

இரண்டாம் பராந்தகன் (கி.பி.956-973) இவன் அரிஞ்சயன் மகன்; வைதும்பராயன் மகளான கல்யாணிக்குப் பிறந்தவன்; இராசகேசரி என்னும் பட்டம் உடையவன்; இவன் ‘மதுரை கொண்ட இராசகேசரி’ எனப்பட்டான். இவ்வரசன் பட்டம் பெற்றதும், பாண்டிய நாட்டைத் தனித்து ஆட்சி செய்துவந்த வீரபாண்டியனை எதிர்த்தான். சேவூர் என்னும் இடத்திற் கடும்போர் நடந்தது. செந்நீர் ஆறாக ஓடியது; பல யானைகள் மடிந்தன. பராந்தகன் மகனான இரண்டாம் ஆதித்தன் சிறுவனாக இருந்தும், போரில் கலந்து கொண்டான், வீர பாண்டியனுடன் விளையாடினான்’ என்று லீடன் பட்டயம் பகர்கின்றது.[3] இச்செயலை மிகைப்படுத்தியே திருவாலங்காட்டுச் செப்பேடு ‘வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்தன்’ என்று கூறியுள்ளது.

சேவூரில் நடந்த போருக்குப் பின், சோழர் பக்கல் நின்று போரிட்ட கொடும்பாளுர்ச்சிற்றரசனான ‘பராந்தக சிறிய வேளார்’ என்பவன் பாண்டிய நாட்டிற்குள் படையொடு சென்று பாண்டியனைக் காட்டிற்குள்


  1. 537. of 1920.
  2. S.I.I. Vol.3. No. 17.
  3. E.I. Vol. 22. Ieyden Grant, 25, 28.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/175&oldid=1233350" இலிருந்து மீள்விக்கப்பட்டது