பக்கம்:சோழர் வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

175



இரண்டாம் பராந்தகன் காஞ்சிபுரத்தில் தனக்கென்று இருந்த அரண்மனையில் இறந்தான்; அதனால் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ எனப்பட்டான்.[1] இதனால், இவன் காலத்தில் முழுத் தொண்டை நாடும் சோழர் ஆட்சிக்கும் மீண்டும் உட்பட்டுவிட்டது என்பது விளங்குகிறதன்றோ?

இரண்டாம் பராந்தகன் மனைவியருள் குறிப்பிடத் தக்கவர் இருவர். இவரே தம் கணவனுடன் உடன் கட்டை ஏறினர்.[2] இவர் இறந்தபொழுது இராசராசன் குழந்தையாக இருந்தான் என்று திருக்கோவலூரில் உள்ள முதல் இராராசன் கல்வெட்டு உணர்த்துகிறது. மற்றவர் சேரன் மாதேவியார்.[குறிப்பு 1] வானவன் மாதேவியார்க்கு ஆதித்த கரிகாலன், இராசராசன், குந்தவ்வை என்னும் மக்கள் மூவர் இருந்தனர். இப்பேரரசன் காலத்திற்றான் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் புத்தமித்திரர் என்பவராற் செய்யப்பட்டது.[3] குந்தவ்வையார் பெற்றோர் படிமங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் எழுந்தருளுவித்தார்.[4]

ஆதித்த கரிகாலன் (கி.பி. 956 - 969) . இவன் பட்டம் பெற்று ஆண்டிலன்; ஆயினும் தந்தைக்கு உதவியாக இருந்தனன்; தன் பெயரால் பல கல்வெட்டுகள் வெளிவரக் காரணமாக இருந்தான். இரண்டாம் பராந்தகன் உயிருடன் இருந்த பொழுதே இவன் கொலை செய்யப்பட்டான்.[5] இதற்குக் காரணம் என்ன? கண்டராதித்தன் மகனான உத்தம சோழன் (மதுராந்தகன்) தக்க வயதடையாததால்,


  1. S.I.I. Vol. 3, p.288.
  2. 236 of 1902.
  3. ‘Cholas’ Vol. 190. 4.
  4. S.I.I. Vol II, Part 1, pp.69-70.
  5. 577 of 1920.
  1. இவர் பெயரால் அமைந்த ஊரே இன்று ‘சேர்மாதேவி’ என வழங்குகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/177&oldid=491296" இலிருந்து மீள்விக்கப்பட்டது