பக்கம்:சோழர் வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சோழர் வரலாறு



புரத்துக்கு மாற்றிக் கொண்டனர். மண்ணைக்கடக்கம் இப்பொழுது மான்யகேடம் எனப்படும். இதன் மதி: கடக்க முடியாத வன்மை உடையது.

இந்நாடுகளை இராசேந்திரன் வென்றான் என்று இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.[1] திருவொற்றியூர் மண்டபம் ஒன்றுக்கு ‘மண்னை கொண்ட சோழன்’ என்னும் பெயர் இடப்பட்டது.[2]

ஈழப்போர் : இராசராசன் காலத்தில் நடந்த ஈழப்போரில் தோற்றோடி ஒளிந்த ஐந்தாம் மஹிந்தன் என்னும் ஈழ அரசன், சில ஆண்டுகள் கழித்துப் பெரும் படை திரட்டிச் சோழர் ஆட்சிக்குட்பட்ட ஈழப்பகுதியை மீட்க முயன்றான். அதைக் கேள்வியுற்ற இராசேந்திரன் பெரும்படையுடன் சென்றான்; போரில் வெற்றி கொண்டான். ஈழத்து அரசனுக்கும் அவன் மனைவியர்க்கும் உரிய முடிகளையும் அணிகலன்களையும் பொன்மணிகளையும் பிற சின்னங்களையும் கைப்பற்றி மீண்டான்; இவற்றுடன் ஒரு நூற்றாண்டுக்கு முன் இராசசிம்ம பாண்டியன் விட்டிருந்த மணிமுடி முதலியவற்றையும் கைப்பற்றினான்.[3] இப்போர் நிகழ்ச்சி கி.பி. 1017-18-இல் நடைபெற்றதாதல் வேண்டும். சோழ சேனைகள் இலங்கையைச் சூறையாடின, தோல்வியுற்ற மஹிந்தன் மீட்டும் காட்டிற்கு ஒடிவிட்டான்’ என்று மகாவம்சம் கூறுகிறது. ஆயினும், அவன் எவ்வாறோ சோணாட்டிற்குப் பிடித்துச் செல்லப்பட்டான். அங்கு அவன் சோழர்க்கு முற்றும் பணிந்துவிட்டான்[4]. அவன் சோழ நாட்டிலே கி.பி.


  1. ‘நெடிதியல் ஊழியுள இடைதுறை நாடும்
    தொடர்வன வேலிப் படர் வென வாசியும்
    சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
    கண்ணரு முரண மண்ணைக் கடக்கமும்’ என்பது மெய்ப் புகழ்.
  2. 103 of 1912.
  3. 4 of 1890; 247 of 1903
  4. 642 of 1909
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/218&oldid=491305" இலிருந்து மீள்விக்கப்பட்டது