பக்கம்:சோழர் வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

சோழர் வரலாறு



அறுத்தான்.[1] இக்குறிப்புகளால் சேரபாண்டிய நாடுகளில் அமைதியை நிலை நாட்டவே இராசேந்திரன் முனைந்திருத்தல் வேண்டும் என்பதே பெறப்படுகிறது.

சாளுக்கியப் போர் : இராசேந்திரனது 9-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், இராசேந்திரன் காஞ்சியினின்றும் புறப்பட்டுச் சென்று, ‘ஜயசிங்கனது’ இரட்டைப்பாடி ஏழரை லக்கம் வென்று நவநிதிகளைக் கைப்பற்றிய செய்தி காணப்படுகிறது. இப்போர் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காப்பிய நடையில் பத்துச் சுலோகங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளது[2]. கி.பி. 1016-இல் ஐந்தாம் விக்கிரமாதித்தனது தம்பியான ஜயசிம்மன் சாளுக்கிய நாட்டை ஆளத்தொடங்கினான். அவன் பல்லாரி, மைசூர் என்னும் பகுதிகளைக் கைப்பற்றினான்.[3] சேர சோழரை வெற்றி கொண்டதாகக் கூறிக் கொண்டான். இராசேந்திரன் ஜயசிம்மனை முயங்கி (முசங்கி) என்னும் இடத்தில் பொருது வென்றான். ‘முயங்கி’ என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள ‘உச்சங்கி துர்க்கம்’ என்பர் சிலர்[4]. ஐதராபாத் சமஸ்தானத்தில் உள்ள ‘மாஸ்கி’ என்பதாகும் என்பர் சிலர்.[5]

கங்கை கொண்டான் : இராசேந்திரனது 41-ஆம் ஆண்டில் இவனது வட நாட்டுப் படையெடுப்புக் கூறப்பட்டுள்ளது. எனவே, இவன் கி.பி.1023-இல் வடநாடு நோக்கிச் சென்று மீண்டிருத்தல் வேண்டும். இப் படையெடுப்பில் இராசேந்திரனது சேனைத் தலைவன் பல நாடுகளை வென்றான்; இராசேந்திரன் அத்தலைவனைக் கோதாவரிக்கரையில் சந்தித்தான். சேனைத் தலைவன் முதலில் (1) சக்கரக் கோட்டத்தை வென்றான். அந்த இடம்


  1. 363 of 1917
  2. V. 99-108
  3. Ep. Car Vol. 7, sk. 202, 307
  4. S.I.I. Vol. 2.pp. 94-95.
  5. Dr. S.K. Aiyangar Sir Asutosh Mookerjee Commemoration Vol 9, pp. 178-9.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/220&oldid=1233378" இலிருந்து மீள்விக்கப்பட்டது