பக்கம்:சோழர் வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சோழர் வரலாறு



மலையூர் என்பன மலேயாத் தீபகற்பத்துப் பகுதிகள் ஆகும். மாப்பப்பாமை, தலைத்தக்கோலம் என்பன ‘க்ரா’ பூசந்திக்குப் பக்கத்துப் பகுதிகள் ஆகும். மாதமாலிங்கம் என்பது மலேயாவின் கீழ்ப்புறத்தில், குவாண்டன் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள தெமிலிங் அல்லது ‘தெம்பெலிங்’ எனப்படுவதாகும். வளைப்பந்துறு என்பது இன்ன இடம் என்பது தெரியவில்லை. பண்ணை என்பது சுமத்ராத் தீவின் கீழ்க் கரையில் உள்ள பனி அல்லது ‘பனெய்’ என்னும் ஊராகும்.

இலாமுரி தேசம் - இது சுமத்ரா தீவின் வடபகுதியில் உள்ள நாடாகும். அரேபியர் இதனை லாமுரி என்று குறித்துளர்.

மாநாக்கவாரம் - இது நிக்கோபார் தீவுகளின் பழம் பெயர் ஆகும்.

இக்காடுகளும் ஊர்களும் அக்காலத்தில் ஸ்ரீ விஷயப் பேரரசிற்கு உட்பட்டு இருந்தன என்று சீன நூல்கள் கூறுகின்றன. இந்தப் பகுதிகளில் நல்ல துறைமுகங்கள் இருந்தன. சீன நாட்டுக் கப்பல்களும் தமிழ் நாட்டுக் கப்பல்களும் சந்திக்கவும், பண்டங்களை மாற்றிக் கொள்ளவும் மலேயா நாடுகளுடன் வாணிகம் செய்யவும் இந்த இடங்கள் பேருதவியாக இருந்தன. இங்கனம் தமிழக வாணிகத்திற்கு உதவியாக இருந்த இடங்களை இராசேந்திர சோழன் வலிந்து வென்றதன் காரணம் இன்னது என்பது விளங்கவில்லை; அங்குத் தங்கி வாணிகம் செய்த தமிழர்[1] உரிமைகளைக் காக்கவோ அல்லது ஸ்ரீ விஷய அரசன் செருக்கை அடக்கவோ தெரியவில்லை. வென்ற அந்நாடு களைச் சோழன் ஆண்டதாகவும் தெரியவில்லை. ஆதலின், மேற் கூறப்பெற்ற காரணங்கள் பொருத்தமாக இருக்கலாம்.

இராசாதிராசன் செய்த போர்கள் : இராசேந்திர சோழன் காலத்திற்றானே இராசாதிராசன் செய்த போர்களும்


  1. A.R.E. 1892, p. 12
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/224&oldid=1233551" இலிருந்து மீள்விக்கப்பட்டது