பக்கம்:சோழர் வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

223



தந்தையையே சாருமாதலின், அவையும் இவன் செய்த போர்கள் என்றே கொள்ளற்பாலன. இனி, அவற்றின் விவரம் காண்போம்.

ஈழப் போர் : இராசேந்திரன் ஆட்சியின் தொடக்கத்தில் உண்டான ஈழப்போருக்குப் பிறகு கி.பி.1042-இல் மீண்டும் இராசாதிராசன் இலங்கையில் போர் நிகழ்த்த வேண்டி யிருந்தது. விக்கிரமபாகு 13 ஆண்டுகள் அரசாண்டு இறந்தான். அவன் சோழருடன் போர் செய்து இறந்தான் என்று சோழர் கல்வெட்டுகள் செப்புகின்றன. அவனுக்குப் பின் கித்தி என்பவன் எட்டே நாட்கள் ஆண்டான் பிறகு மஹாலான கித்தி என்பவன் மூன்றாண்டுகள் ரோஹன நாட்டை ஆண்டான். அவன் சோழருடன் போரிட்டுத் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டான். துளுவ நாட்டிற்கு ஒடவிட்ட அவன் மகன் விக்கிரம பாண்டியன் (சிங்கள அரசனுக்கும் பாண்டியன் மகளுக்கும் பிறந்தவன்) ரோஹணத்தை அடைந்து அரசன் ஆனான். அவன் ‘ஜகதீபாலன்’ என்பவனுடன் செய்த போரில் இறந்தான். இந்த ஜகதீபாலன் அயோத்தியை ஆண்ட அரசகுமாரன் என்று மகாவம்சம் கூறுகிறது. அவன் கன்யா குப்ஜம் என்னும் நாட்டிலிருந்து ஓடிவந்தான்; அவன் பெயர் ‘வீரசலாமேகன்’ என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. இலங்கை வேந்தரை வென்ற அவனையும் சோழர் கொன்றனர்; அவன் தமக்கை, மனைவியரைச் சிறை கொண்டு, தாயை மூக்கரிந்து அவமானப்படுத்தினர். விக்கிரம பாண்டியன் மகன் பராக்கிரமன், சோழர் அவனையும் வென்று முடிகொண்டனர்[1].

பாண்டியருடன் போர் : பாண்டிய நாட்டில் சுந்தர பாண்டியன் சிற்றரசனாக இருந்து ஒரு பகுதியை ஆண்டுவந்தான். அவன் ஒரு படைதிரட்டிக் கலகம் விளைத்தான். இராசாதிராசன் அவனைப் போரில்


  1. S.I.I. Vol. 3, pp. 26. 56; 172 of 1894, 92 of 1892.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/225&oldid=491314" இலிருந்து மீள்விக்கப்பட்டது