பக்கம்:சோழர் வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

சோழர் வரலாறு



முறியடித்து நாட்டை விட்டு விரட்டி விட்டான். இஃது எந்த ஆண்டு நடந்தது என்பது கூறக்கூடவில்லை.

மலைநாட்டுப் போர் : இராசாதிராசன் மலை நாட்டை ஆண்ட அரசர் பலரைப் பொருது வெற்றிகொண்டான் என்று அவனது மெய்ப்புகழ்[1] கூறுகிறது. இராசாதிராசன் பாண்டி மண்டலத்தினின்றும் காந்தளுர்ச்சாலையில் கலம் அறுக்கச் சென்றான்; வழியில் வேள்நாட்டு அரசனைத் தாக்கிக் கொன்று, கூபக நாட்டு (தென் திருவாங்கூர்) அரசனை விடுவித்தான்[2]. எலிமலைக்குப் பக்கத்தில் இருந்த, நாடு ‘இராமகுடம்’ என்பது ‘எலி நாடு’ எனவும் படும். அதன் அரசன் மூவர் திருவடி எனப்பட்டான்[3]. இராசாதிராசன் அவனை வென்று, சேரனைத் துரத்தி அடித்தான், இச்செய்திகளை இவனது “திங்களேர்தரு’ என்று தொடங்கும் கல்வெட்டிற் காணலாம்.

மேலைச் சாளுக்கியப் போர் : இராசேந்திரனது இறுதிக் காலத்தில் மேலைச் சாளுக்கியர் சோழருடன் மீண்டும் போர் தொடுத்தனர். கி.பி.1042-இல் சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜயசிம்மன் இறந்தான். அவன் மகனான முதலாம் சோமேசுவரன் அரசன் ஆனான். அவனுக்கு ஆகவமல்லன், திரைலோக்கிய மல்லன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. சோழர் கல்வெட்டுகளில் அவன் ‘ஆகவமல்லன்’ என்றே குறிக்கப்பட்டான். இதனாற் போர் மூண்டது. இராசாதி ராசன் சாளுக்கிய சேனையைப் புறங்கண்டான். சேனைத் தலைவர்களான தண்டப் பையன், கங்காதரன் என்போரைக் கொன்றான். சோமேசுவரன் மக்களான விக்கிரமாதித்தனும் விசயாதித் தனும் சங்கமையன் என்ற தானைத் தலைவனும் போர்க்களத்தினின்றும் ஓடி மறைந்தனர். இராசாதித்தன் பகைவர் பொருள்களைக் கைக்கொண்டு கொள்ளிப்


  1. S.I.I. Vol. 3, p. 56.
  2. 75 of 1895; M.E.R. 1913. ii. 26.
  3. M.E.R. 1930. p.86; 523 of 1930.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/226&oldid=491315" இலிருந்து மீள்விக்கப்பட்டது