பக்கம்:சோழர் வரலாறு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

239



பெயர்களைக் கொண்டே இருந்தன. நாட்டு உட்பிரிவு முதலியன பற்றிய செய்திகள் நான்காம் பாகத்திற் கூறப்படும். ஆண்டுக் காண்க.

அரசியல் அலுவலாளர் சிற்றரசர் : அரசியலை நடத்த அலுவலாளர் பலர் இருந்தனர். அவர்கள் ‘கருமிகள்’ ‘பணியாளர்’ என இருதிறப்பட்டனர். முன்னவருள் பெருந்தரம், சிறுதரம் என இருவகையினர் இருந்தனர்.இவர் அரசியல் தொடர்பான பல பிரிவுகளைக் கவனித்து அரசியலைக் குறைவற நடத்திவந்தனர். உயர் அலுவலாளர் தம் தகுதிக்கேற்ப அரசனிடமிருந்து நிலம் அல்லது அதன் வருவாய் பெற்றுப் பணிசெய்து வந்தனர். இராசேந்திரன் ஆட்சியில் அவன் பெற்ற வெற்றிகட்குக் காரணமாக இருந்தவர் மூவர் ஒருவன் அரையன் இராசராசன். இவன் சாளுக்கியர் போர்களிற் புகழ் பெற்றவன். இவன் படையொடு சென்றதைக் கேட்ட வேங்கி மன்னன். ஒடிவிட்டான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது[1]. இவன் ‘நால்மடி பீமம், சாமந்தா பரணம், வீரபூஷணம், எதிர்த்தவர் காலன்’ முதலிய விருதுகளைப் பெற்றவன். இவன் இராசராசன் கால முதலே சோழர் தளகர்த்தனாக இருந்தவன்[2] கிருஷ்ணன் இராமன் என்பவன் மற்றொரு சேனைத் தலைவன். இவனும் இராசராசன் காலத்தவன். இவன் மகனான மாராயன் அருள்மொழி ஒருவன். இவன், இராசேந்திரன் கி.பி.1033-இல் கோலாரில் பிடாரி கோவில் ஒன்றை எடுப்பித்தபொழுது உடன் இருந்து ஆவன செய்தவன்[3]. இவன் ‘உத்தமசோழப் பிரம்மராயன்’ என்னும் பட்டம் பெற்றவன். அரசன் அவரவர் தகுதிக்கேற்பப் பட்டங்களை அளித்துவந்தான், அமைச்சர், தானைத் தலைவர் முதலிய உயர் அலுவலாளர்க்குத் தனது பட்டத்துடன் அல்லது விருதுடன் ‘மூவேந்த வேளான்’ என்பதைச் சேர்த்து அளித்துவந்தான் வேறு


  1. 75 of 1917.
  2. 23 of 1917.
  3. 480 of 1911
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/241&oldid=491327" இலிருந்து மீள்விக்கப்பட்டது