பக்கம்:சோழர் வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

247



இஃது உண்மையாயின், இவனுக்கு மக்கள் இருந்தனர் என்பது தெரிகிறது[1]. அவர்கள் யாவர் - என்ன ஆயினர் என்பன விளங்கவில்லை.

விருதுப் பெயர்கள் : இராசாதிராசன் - விசயராசேந்திரன் (கலியாண புரத்திற்கொண்ட பெயர்) வீரராசேந்திர வர்மன், ஆகவமல்ல குலாந்தகன், கலியாணபுரம் கொண்ட சோழன் முதலிய பெயர்களைப் பெற்றிருந்தான்[2]

சிற்றரசரும் அரசியலாரும் : இராசாதிராசன் காலத்தில் சிற்றரசராகவும் பேரரசின் உயர் அலுவலாளராகவும் பலர் இருந்தனர். ‘தண்டநாயகன் சோழன் குமரன் பராந்தகமாராயன்’ எனப்பட்ட ‘இராசாதிராச நீலகங்க ராயர்’ என்பவன் ஒருவன்[3], ‘பஞ்சவன் மாதேவியார்’ என்பவள் கணவனான பிள்ளையார் சோழ வல்லப தேவன், ஒருவன். கடப்பைக்கோட்டத்தில் மகாராசப் பாடி ஏழாயிரம், ஆண்ட தண்ட நாயகன் அப்பிமையன் என்பவன் ஒருவன்[4]. ‘பிள்ளையார் வாசுவர்த்தன தேவர், எனப்பட்ட சாளுக்கிய இராசராசன் ஒருவன்[5]. அவன் மனைவியே இராசேந்திரன் மகளும் இராசாதிராசன் தங்கையுமான அம்மங்காதேவி என்பவள். அவள் கி.பி. 1050-இல் திருவையாற்றுக் கோவிற்கு வேங்கி நாட்டுப் பொற்காசுகளான இராசராச மாடைகள் 300 தானம் செய்தாள். சேனாபதி இராசேந்திர சோழ மாவலி வாணராயர் என்பவன் ஒருவன். ‘உலகளந்த சோழப் பிரம்மமாராயன்’ ஒருவன். இவன் ‘அதிகாரிகள் பாராச்ரயன் வாசு தேவ நாராயணன்’ எனவும் பெயர் பெற்றவன். இவன் இராசாதிராசன் ‘குருதேவன்’


  1. S.I.I. Vol. 3, No.28.
  2. 78 of 1920, 188 of 1919, 258 of 1910, 102 of 1912.
  3. 85 of 1920.
  4. 279 of 1895.
  5. 221 of 1894.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/249&oldid=1233576" இலிருந்து மீள்விக்கப்பட்டது