பக்கம்:சோழர் வரலாறு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

சோழர் வரலாறு



மாள் என்பவனுக்குச் சூரியவல்லியார் என்ற தன் மகளை மணம் செய்து கொடுத்தான்[1].

சீனத்துடன் உறவு : இராசராசன், இராசேந்திரன் இவர்கள் சீனத்துக்குத் தூதுவரை அனுப்பிக் கடல் வாணிகத்தைப் பெருக்கினாற் போலவே கி.பி. 1077-இல் குலோத்துங்கன் 72 பேர்கொண்ட தூதுக்குழு ஒன்றைச் சீன நாட்டிற்கு அனுப்பினான். அவர்கள் கண்ணாடிப் பொருள்கள், கற்பூரம், காண்டாமிருகத்தின் கொம்புகள், தந்தம், வாசனைப் பொருள்கள், கிராம்பு, ஏலக்காய் முதலிய பல பண்டங்களைச் சீன அரசர்க்குப் பரிசிற் பொருள்களாகக் கொண்டு சென்றனர். சீன அரசன் அவர்களை வரவேற்றான்; அப்பொருள்களைப் பெரு மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான், அவற்றுக்குப் பதிலாக 81,800 செம்புக் காசுகள் கொடுத்துப் பெருமைப் படுத்தினான்[2].

கடாரத்துடன் உறவு : குலோத்துங்கன் கடாரத்தை அழித்தான் என்று பரணி பகர்கிறது. கடல் கடந்த நாடுகளிலிருந்து உயர்ந்த பொருள்கள் பரிசிலாக அனுப்பப்பட்டன என்று குலோத்துங்கன் கல்வெட்டுகள் கூறுகின்றன. காம்போச நாட்டு அரசன் குலோத்துங்கற்கு விலை உயர்ந்த கல் ஒன்றைக் காட்சியாகக் காட்டினான் என்று ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது[3]. கி.பி. 1090-இல் ஸ்ரீவிசயன் என்னும் கடாரத்தரசன், நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு பெளத்த விஹாரங்கட்குப் பள்ளிச் சந்தமாக விட்ட சிற்றுரர்களைக் குறித்துத் தானக் கட்டளை பிறப்பிக்குமாறு குலோத்துங்கனை வேண்டினான். அப்பள்ளிகள் இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற பெயரைக்


  1. K.A.N. Sastry’s ‘Cholas II.p.25
  2. K.A.N. Sastry’s “Cholas’, Vol.II. pp. 25,26
  3. Ep. Ind Vol. 5, p. 105
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/260&oldid=1233586" இலிருந்து மீள்விக்கப்பட்டது