பக்கம்:சோழர் வரலாறு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

265



மரபினர். இவர்கள் மேலைச் சாளுக்கிய்ர்களுக்கு அடங்கி ஆண்டு வந்த சிற்றரசர். இவருள் ஒருவனான எரியங்கன் என்பவனே குலோத்துங்கற்கும் விக்கிரமாதித்தற்கும் நடந்த போரிற் பின்னவன் பக்கம் நின்று போரிட்டவன். ஹொய்சளர் இராசராசன் காலம் முதலே இருந்து வந்தனர்.

அவருள் முதல் அரசன் திருமகாமன் (கி.பி. 1022-1040) என்பவன். அவன் மகன் விநயாதித்தன். அவன் மகனே எரியங்கன். விநயாதித்தன் கி.பி.1040 முதல் 1100 வரை ஆண்டான். கி.பி.1100-இல் பிட்டிக விஷ்ணு வர்த்தனன் அரசன் ஆனான். இவன் கி.பி.1116-இல் சோழரிடமிருந்து தழைக்காட்டை மீட்டான், அதனால் ‘தழைக் காடு[குறிப்பு 1] கொண்ட’ என்னும் தொடரைத் தன் பெயர்க்கு முன் பூண்டான். அந்த ஆண்டிலே இவன் கங்கபாடி முழுவதும் தனதாக்கி ஆண்டான் என்பது இவன் கல்வெட்டால் தெரிகிறது[1].

கங்கபாடி நீண்ட காலமாகச் சோழர் ஆட்சியில் இருந்து வந்த நாடாகும். அது கொங்கு நாட்டை அடுத்தது; ஆசலால், கொங்கு நாட்டை ஆண்டுவந்த அதியமான் மேற்பார்வையில் இருந்து வந்தது. அதியமான்கள் சோழர் படைத்தலைவராகவும் சிற்றரசராகவும் இருந்தார்கள். விஷ்ணுவர்த்தனன் தானைத் தலைவனான ‘கங்கராசன்’ அதியமானைச் சரண்புக அழைத்தான். அதியமான் மறுக்கவே, போர் மூண்டது. அதியமான், தாமோதரன், நரசிம்மவர்மன் முதலிய சோழர் படைத் தலைவர்கள் போரிட்டனர்; இறுதியில் தோற்றனர். அதன் விளைவாகக் கங்கபாடி ஹொய்சளர் ஆட்சிக்குச் சென்றுவிட்டது[2]. குலோத்துங்கன் கல்வெட்டுகள் 15 வரையே கங்கபாடியிற்


  1. இஃது இராசராசபுரம் என்று சோழர் ஆட்சியில் பெயரிடப்பட்டது.
  1. Rice’s ‘Mysore and Coorg from Ins.’ p.93
  2. Ep. Carnataka, Vol. II, No.240.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/267&oldid=1233592" இலிருந்து மீள்விக்கப்பட்டது