பக்கம்:சோழர் வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

267



சிதம்பரம் கோவில் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. அதன் காலம் கி.பி.1114[1].

சோழப் பேரரசு : குலோத்துங்கன் ஆட்சியில் 45 ஆண்டுகள் வரை (கி.பி.1115 வரை) சோழப் பேரரசு முன்னோர் வைத்த அளவிலேயே இருந்தது. தெற்கே ஈழ மண்டலம் ஒன்றே ஆட்சியிலிருந்து பிரிந்துவிட்டது. கி.பி.1116-இல் கங்கபாடி பிரிந்தது. கி.பி.1118-இல் வேங்கி நாட்டின் பெரும் பகுதியும் சாளுக்கியர் ஆட்சிக்கு மாறிவிட்டது. குலோத்துங்கன் இறக்குந் தறுவாயில் கடப்பை, கர்நூல் கோட்டங்கனே வட எல்லையாக இருந்தன எனலாம். கடப்பைக் கோட்டத்தில் உள்ள நந்தலூர் ‘குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயர் பெற்றது[2].

தலைநகரங்கள் : (1) குலோத்துங்கனுடைய சிறப் புடைக் கோ நகர் கங்கை கொண்ட சோழபுரமே ஆகும். (2) அடுத்தது காஞ்சிபுரமாகும். அதில் இருந்த அபிஷேக மண்டபத்தில் இருந்தே அரசன் சிறப்புடைய பல பட்டயங்களை வெளியிட்டுள்ளான்[3]. (3) கங்கை கொண்ட சோழன் வளர்த்த சிறப்புடைய அரண்மனை யான ஆயிரத்தளி (பழையாறை)யில் இருந்த அரண்மனை ஒன்று[4] (4) திருமழபாடி அரசற்கு உகந்த சிறந்த நகரமாக இருந்தது[5].

சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சியில் வெளிப்பட்ட கல்வெட்டுகளில் சிற்றரசர் பலர் குறிக்கப்பட்டுள்ளனர். (1) தென் ஆர்க்காடு கோட்டத்தின் வடமேற்கு மலைப் பகுதியைச் சேதிராயர் என்னும் பெயர் கொண்ட சிற்றரசர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகர் கிளியூர் என்பது. (2)


  1. 29 of 1908; A.R.E. 1908, Vol.II, 58-60.
  2. 600 of 1907
  3. S.I.I. Vol.3, No.73; M.E.R. 1917, pp. 42-44
  4. A.S of S.I. Vol. 4, 224
  5. 231 of 1916
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/269&oldid=1233593" இலிருந்து மீள்விக்கப்பட்டது