பக்கம்:சோழர் வரலாறு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

சோழர் வரலாறு



பெரிய உடையான் இராசராசன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழன் என்பவர் திருமுனைப்பாடிநாட்டில் பேரரசர். அவருக்கு அடங்கிய தலைவர் சிலர் இருந்தனர். அவர்கள் மலையகுலராசன் முதலியோர். (3) வட ஆர்க்காட்டில் மேற்குப் பகுதியும் மைசூரின் கிழக்குப் பகுதியும் சேர்ந்த நாடு ‘முள்வாய் நாடு’ எனப்பட்டது. அதனைக் கங்க நுளம்பன் ஒருவன் ஆண்டு வந்தான்[1]. (4) வேங்கி நாட்டில் வெலனாண்டித் தலைவனான ‘கொங்கன் வடபகுதிச் சிற்றரசருட் சிறந்தவன். அவன் மரபினர் நீண்டகாலம் தம் நாட்டை அமைதியாக ஆண்டு வந்தனர்[2]. குலோத்துங்கன் இக்கொங்கன் மகனைத் தன் மைந்தன் போலக் கருதிச் சிறப்புச் செய்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. (5) கடப்பையை ஆண்ட சிற்றரசன் பொத்தப்பிகாம சோட மகாராசன் என்பவன். அவனுடைய சேனைத் தலைவர்கள் இராமண்ணன், பெக்கட பீமய்யன் என்பவர்[3]. (6) மற்றொரு தெலுங்கச் சிற்றரசன் பல்லவ மரபினன் ஆவன். அவன் தன்னை மகா ‘மண்டலேசுவரன்’ என்றும் ‘காஞ்சிபுரேசுவரன்’ என்றும் கூறியுள்ளான்[4].

அமைச்சரும் தானைத் தலைவரும் : இவர் பலராவர். இவருட்சிறந்தவர் சிலரே. இவருள் ‘ஞானமூர்த்தி பண்டிதன் ஆன மதுராந்தகப் பிரமாதிராசன்’ என்பவன் ஒருவன். இவன் நாலூரைச் சேர்ந்தவன்; வத்ச கோத்திரத்தான். இவன் சோழன் தானைத் தலைவருள் ஒருவன்[5]. ‘பாரத்வாசன் மன்ற நாராயணன்’ என்பவன் ஒருவன். இவனுக்கு ‘வீர சந்தோஷ பிரம சக்கரவர்த்தி’ என்ற பெயரும் இருந்தது. இவன் திருப்பத்துரை ஆண்ட சிற்றரசன் போலும் இவன் குலோத்துங்கன் அமைச்சருள் ஒருவன்[6]. கருணாகரத் தொண்டைமான் புகழ் பெற்ற


  1. 568 of 1906
  2. A.R.E. 1917, Vol. II, 27
  3. 262, 263 of 1905
  4. 405 of 1893
  5. 119 of 1912
  6. 519 of 1022; A.R.E. 1923, II. 33,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/270&oldid=1233594" இலிருந்து மீள்விக்கப்பட்டது