பக்கம்:சோழர் வரலாறு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

281



இருந்தனர். தொண்டைநாட்டில் ‘ஆனைவாரி’யைத் தலைநகராகக் கொண்டு ‘சாளுக்கியர்’ என்பவர் ஆண்டு வந்தனர்[1]. தெற்கே இருந்த சிற்றரசருள் ‘பாண்டிநாடு கொண்டான்’ என்பவன் ஒருவன்[2]. இராமநாதபுரம் கோட்டத்துச் ‘சிவபுரியை ஆண்ட ‘சுண்டன் கங்கை கொண்டான், ஒருவன். இவனுக்குத் துவராபதி வேளான் என்ற பெயரும் இருந்தது. இவனிடம் சிறந்த வாள்வீரர் இருந்தனர்[3]. தெலுங்கு நாட்டில் சிற்றரசர் பலராவர். அவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர். கி.பி.121-இல் பொத்தப்பி நாட்டை ஆண்டவன் மதுராந்தகன் - பொத்தப்பிச் சோழன் என்பவன். இவன் மகாமண்டலேசுவரன் - விமலாதித்த தேவன் என்னும் பெயர் பெற்றவன்.இவன் தன்னைக்கரிகாலன் வழிவந்தவன் என்று குறித்துள்ளான்[4]. இப்பொத்தப்பிச் சோழமன்னர்கள் காளத்தியில் உள்ள கோவிற்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.[5] வெலனான்டி ‘இரண்டாம் கொங்கன் ஆன கொங்கயன், ஒருவன். இவன் முன்னோர் சோழப் பேரரசனிடம் உள்ளன்பு கொண்டவர், விக்கிரம சோழனுடன் தென் கலிங்கப் போரில் ஈடுபட்டவர். கொள்ளிப் பாக்கைக்குத் தலைவனான ‘நம்பையன்’ ஒரு சிற்றரசன். காளத்தி நாட்டுப் பகுதியை ஆண்டவன் மகா மண்டலேசுவரன் கட்டிதேவமகாராசன் என்பவன்[6]. இவன் முன்னோர் வீரராசேந்திரன் காலத்தும் உண்மை உடையவராகவே இருந்தனர்.

இனி, விக்கிரம சோழன் உலாவிற் கூறப்பட்டுள்ள சிற்றரசர் யாவர் என்பதைக் காண்போம் : 1. கருணாகரத் தொண்டைமான் முதல்வன். 2. முனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த முனையதரையன் ஒருவன். இவன் தானைத்


  1. 378 of 1913
  2. 521 of 1905
  3. 47 of 1929
  4. 579 of 1907
  5. 102 of 1922
  6. 155 of 1922
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/283&oldid=1234139" இலிருந்து மீள்விக்கப்பட்டது