பக்கம்:சோழர் வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

285



திருமாளிகை[1]’ எனவும் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒன்று ‘விக்கிரம சோழன் திருவீதி[2]’ எனவும் வழங்கின என்பது பிற்காலக் கல்வெட்டுகளால் அறியக் கிடக்கும் செய்தியாகும்.

விக்கிரம சோழன் சிறந்த சிவபக்தன் ஆயினும், திருவரங்கம் பெரிய கோவிலிலும் திருப்பணி செய்ததாகத் தெரிகிறது. அக்கோவிலின் ஐந்தாம் திருச்சுற்று மதில் இவனால் கட்டப்பட்டது; இராமன் கோவில் முதலியன இவனால் அமைப்புண்டவை எனத் ‘திருவரங்கம் கோவில் ஒழுகு’ தெரிவிக்கின்றது. சமயத்துறையில் இவன் முன்னோரைப் போலவே சமரச நோக்குடன் இருந்தமை பாராட்டற் பாலதே அன்றோ?


3. இரண்டாம் குலோத்துங்கன்
(கி.பி. 1133 - 1150)

அரசுரிமை : இரண்டாம் குலோத்துங்கன் விக்கிரம சோழன் மகன். இவன் கி.பி.1133-இல் பட்டம் பெற்றுத் தந்தையுடன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். விக்கிரம சோழன் கி.பி 1135-இல் இறக்க, இவனே சோழப் பேரரசன் ஆனான். இவனுடைய கல்வெட்டுகள் குறிக்கும் மெய்க்கீர்த்தியில் வரலாற்றுக் குறிப்புக் கிடைப்பது அருமை. எனவே, இவன் காலத்தில் போர்ச் செய்திகள் இல்லை என்பது தெளிவு. இவனது ஆட்சி அமைதியும் செழுமையும் உடையதாக இருந்தது. விக்கிரம சோழன் ஆட்சியில் இருந்த சோழப் பெருநாடு. இவனது ஆட்சியிலும் அங்ஙனமே இருந்தது.

கல்வெட்டுத் தொடக்கம் : இரண்டாம் குலோத்துங்க னுடைய கல்வெட்டுகள் பின்வரும் முதற் குறிப்பை உடையன : 1. பூமன்னு பாவை 2. பூமருவிய புவியேழும்


  1. 282,284287 of 1913
  2. 312 of 1913
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/287&oldid=493113" இலிருந்து மீள்விக்கப்பட்டது