பக்கம்:சோழர் வரலாறு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

சோழர் வரலாறு



பெற்றவன்[1]. 12. பொத்தப்பி நாட்டை ஆண்ட மதுராந்த கன் பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன் ஒருவன்[2].

பட்டப் பெயர்கள் : இரண்டாம் குலோத்துங்கன் விருதுப் பெயர்கள் பலவாகும். அவற்றுள் ‘திருநீற்றுச் சோழன்’ என்பது ஒன்று. இப்பெயர் முதற் குலோத்துங்கனும் கொண்டிருந்தான். அதனால் இக்காலத்துச் சேக்கிழாரை முதற் குலோத்துங்கன் காலத்தவர் என மயங்கக் கொண்டாரும் உளர். எதிரிலிசோழன், கலிகடிந்த சோழன் என்பனவும் முன்னோர் கொண்ட விருதுப் பெயர்களே ஆகும். இவன் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் எனப்பட்டான்[3]. இவனுக்கே சிறப்பாக உரிய விருதுப் பெயர் ‘அநபாயன் என்பதே ஆகும்.[4] இப்பெயர் இவனுடைய கல்வெட்டுகளிலும் உலாவிலும் இருப்பதோடு இவனது அரசியற் செயலாளன் பெயரிலும் காணப்படல் நோக்கத் தக்கது. அச்செயலாளன் அநபாய மூவேந்த வேளான் எனப்பட்டான்[5]. பல சிற்றுரர்கள் அநபாய நல்லூர் என்று பெயரிடப்பட்டன[6].

அரச குடும்பம் : திருமழபாடிக் கல்வெட்டில் அரச மாதேவியர் இருவர் குறிக்கப்பெற்றுளர். அவருள் பட்டத்தரசி தியாகவல்லி என்பவள். அவளுக்கே ‘புவனமுழுதுடையாள், என்ற பெயரும் உண்டு. மற்றவள் ‘முக்கோக்கிழான்’ என்பவள். இவள் மலாடுடை சிற்றரசர் மகளாவள்[7]. இவனுடைய பிற மனைவியரைப் பற்றியோ பிள்ளைகளைப் பற்றியோ ஒன்றும் அறியக் கூடவில்லை. இவனுக்கு இராசராசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவன் கி.பி.146-இல் முடி சூடிக்கொண்டு தந்தையுடனே


  1. 172 of 1897
  2. 572 of 1907
  3. 350 of 1927
  4. 269 of 1901
  5. 531 of 1912
  6. 271 of 1215, 533 of 1921, 346 of 1911.
  7. 85 of 1895
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/290&oldid=493950" இலிருந்து மீள்விக்கப்பட்டது