பக்கம்:சோழர் வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

289



நாட்டை ஆண்டு வந்தான். இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் சோழர்கோ நகரம் கங்கைகொண்ட சோழபுரமே ஆகும். எனினும், இவன் காலத்தில் சிதம்பரம் பெருஞ் சிறப்படைந்தது; அரசன் அடிக்கடி தங்கும் பெருநகரமாக விளங்கியது.

அவைப்புலவர் : இரண்டாம் குலோத்துங்கன் அவையில் ஒட்டக்கூத்தர் பெரும் புலவராக இருந்தார். அவர் விக்கிரம சோழன் காலத்திலும் இவன் காலத்திலும் இவன் மகன் இரண்டாம் இராசராசன் காலத்திலும் இருந்தவர் ஆவர்; மூவர்மீதும் உலாப் பாடினவர்.இரண்டாம் குலோத்துங்கன் இவரிடம் தமிழறிவு பெற்றிருத்தல் கூடும். ஆனால் இவர் பெயர் ஒரு கல்வெட்டிலும் காணப்படவில்லை. அதனால், இவர் இருந்திலர் எனக் கூறல் இயலாது. என்னை? இவர் பாடிய உலாப் பிரபந்தங்களும் பிறவும் இருத்தலின் என்க. இங்ஙனமே,குன்றத்துர்-சேக்கிழார் இப்பேரரசன் காலத்தில் இருந்தவர்; அரசன் வேண்டத் திருத் தொண்டர் புராணத்தைப் பாடியருளியவர். இவரைப் பற்றி வேறிடத்து விரிவாகக் கூறப்படும்.ஈடும் எடுப்பும் அற்ற திருத்தொண்டர் புராணமும், கூத்தர் செய்த உலாக்களும் பரணியும் இக்காலத்துச் சிறந்த இலக்கிய நூல்கள் ஆகும். இவற்றால் இவ்வரசனைப்பற்றியசெய்திகள் ஓரளவு அறியவசதி உண்டு இப்புலவர்களையும் இவ்விலக்கியங்களையும் பற்றிப் பிற்பகுதியில் விரிவானவரலாறு தரப்படும்; ஆண்டுக்காண்க

சமயநிலை : இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரத்தில் முடிகவித்துக் கொண்டான் என்பது தெரிகிறது. இவன் காலத்தில் தில்லை நகர் சொல்லொணாச் சிறப்புற்றுப் பொலிந்திருந்தது. நகரம் சீர்திருத்தப்பட்டது; கோவில் சிறப்புற அமைக்கப்பட்டது. இதனை முதன் முதல் அறிவிப்பது அரசனது 7ஆம் கல்வெட்டே ஆகும். அது திருப்புறம்பியக் கல்வெட்டு ஆகும்[1]. இவன் தனது மூன்றாம்


  1. 350 of 1927
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/291&oldid=493115" இலிருந்து மீள்விக்கப்பட்டது