பக்கம்:சோழர் வரலாறு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

சோழர் வரலாறு



இவனது பெருநாட்டின் பரப்பென்னை? இவனது 7-ஆம் ஆட்சியாண்டில் குவலால நாட்டில் (கோலார் கோட்டம்) காடுவெட்டி என்ற சிற்றரசன் மலை மீது ஒரு கோவில் கட்டினான்[1]. நிகரிலி சோழமண்டலம் எனப்பட்ட கங்கநாட்டில் தகடுர்நாட்டைச் சேர்ந்த ‘பெரும்பேர்’ என்ற இடத்தில் தானம் செய்த கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதனைச் செய்தவன் ‘தகடுர் கிழவன்’ என்பவன். அது கி.பி.164-இல் செய்யப்பட்டது[2]. இதனால் கொங்கு நாடும், கங்கபாடியின் ஒரு பகுதியும் இராசராசன் பெருநாட்டின் பகுதிகள் என்பதே அறியக் கிடக்கிறது. வேங்கி நாட்டில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகள் பல கிண்டத்துள்ளன. அவை திராக்ஷாராமம் வரை பரவிக் கிடக்கின்றன.[3] இக்குறிப்பால் வேங்கிநாட்டிலும் சோழ அரசு பரவி இருந்தமை நன்குணரலாம். சுருங்கக் கூறின், விக்கிரம சோழன் காலத்துப் பெருநாடு அப்படியே இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் இரண்டாம் இராசராசன் காலத்திலும் நிலைத்திருந்தது எனக் கூறலாம்.

அரசு நிலை : முதற் குலோத்துங்கன் ஆட்சிக்குப் பிறகு சோழ நாட்டு நடு அரசியல் அமைப்பு வலியற்று விட்டது. சிற்றரசர் பலராயினர். அவரவர் பேரரசிற்கு ஒருவாறு அடங்கினாற்போலக் காட்டிக் கொண்டனரேனும், தமது நாட்டளவில் முற்றும் சுயேச்சையே கையாண்டனர். அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை நிலவவும் போரிடவும் தொடங்கினர். நடு அரசியல் இவற்றைத் தடை செய்ய முடியவில்லை. பேரரசன் படைவன்மை மேலைச் சாளுக்கியர் படையெடுப்பையும் ஹொய்சளர் படை யெடுப்பையும் பாண்டிய சேரநாட்டுக் குழப்பங்களையும் தடுப்பதிலேயே ஈடுபட வேண்டியதாயிற்று. வெளிநாடு களின் படையெடுப்புகட்குச் சிறப்புக் கவனம் செலுத்த நேர்ந்ததால், பெரு நாட்டுச்சிற்றரசர் நிலையைக் கவனித்து


  1. 486 of 1911
  2. 18 of 1900, 267, of 1901
  3. 216 of 1893
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/294&oldid=493944" இலிருந்து மீள்விக்கப்பட்டது