பக்கம்:சோழர் வரலாறு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

293


அவ்வப்போது ஒழுங்குபடுத்தப் போதிய சமயம் வாய்த்திலது.பேரரசனது இத்துன்பநிலையை நன்குணர்ந்த சிற்றரசர் தத்தம் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டே வந்தனர். ஆனால் பெருநாட்டில் இருந்த சிற்றூர் அவைகளும் நகர அவைகளும் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்துவந்தன. எனினும், முதல் இராசராசன் ஏற்படுத்திய வலிமையுற்ற நடு அரசாங்க அமைப்புத் தளர்ச்சியுற்று விட்டதென்பதில் ஐயமில்லை.

சிற்றரசர் : இரண்டாம் இராசராசன் காலத்துச்சிற்றரசர் யாவர்? 1. ‘மலாடு 2000’ என்பதை ஆண்டவன், திருக்கோவ லூரில் பெருமாள் கோவிலைக் கட்டிய நரசிம்மவர்மன் என்பானுக்குப் பெயரன் ஆவன்[1]. 2. அதே மலை நாட்டின் ஒரு பகுதியை ‘மலையமான்கள்’ ஆண்டுவந்தனர். அவருள் ‘மலையமான் பெரிய உடையான்’ ஒருவன், ‘அத்திமல்லன் சொக்கப் பெருமான்’ ஒருவன்; இவன் கிளியூரை ஆண்டவன்[2] 3. கூடலூரை ஆண்ட ‘காடவராயர்’ மரபினன் ஒருவன். அவன் ‘கூடலூர் ஆளப் பிறந்தான் மோகன்’ என்பவன். அவனுக்கு ‘இராசராசக் காடவராயன்’ என்ற பெயரும் உண்டு.[3] 4. சோழ நாட்டில் காரிகைகுளத்துரை ஆண்ட பல்லவராயன் ஒருவன். அவன் பல்லவராயன்பேட்டையில் இராசராசேசுவரம் உடையார் கோவில் ஒன்றைக் கட்டினான். அவனே இராசராசன் இறுதிக் காலத்திலும் இராசராசன் இறந்த பிறகும் சோணாட்டை நிலைகுலையாமற் காத்த பெருவீரன்[4]. 5.நித்தவிநோத சாம்புவராயன் என்பவன் ‘செங்கேணித்[5] தலைவருள் ஒருவன், இவன் மனைவி சீருடையாள் என்பவள். முன்னூர், அச்சரப்பாக்கம் கோவில்களில் திருப்பணி செய்த ‘இராச நாராயண சாம்புவராயன்’ ஒருவன். இவன் ‘அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான்’


  1. 119 of 1909
  2. 163 of 1906, 411 of 1900
  3. 166 of 1906
  4. 434,435 of 1924
  5. 168 of 1918, 52 of 1919, 244 of 1901
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/295&oldid=1234227" இலிருந்து மீள்விக்கப்பட்டது