பக்கம்:சோழர் வரலாறு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

சோழர் வரலாறு



இவர்கள் மலைநாட்டை ஆண்டவராதலின் ‘மலையர், மலையரையர், மலையகுலரயர், மலையமான்கள்’ எனப்பட்டனர்; கோவலூரைத் தலைநகராகக் கொண்டமையின் ‘கோவ்லராயர்’ எனப்பட்டனர். முதல் இராசராசனது தாய் இம்மலையர் மரபினளே ஆவள்[1], இம்மரபினர் திருக்கோவலூர், கிளியூர், ஆடையூர், ஆகியவற்றைத் தலைநகரங்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் சோழப் பேரரசன் ஒருவன் காலத்தில் இருவராகவும் மூவராகவும் இருத்தல் காண - இத்தலை நகரங்களைக் காண-இம்மரபினர் மலைநாட்டை இரண்டு மூன்று பிரிவுகளாகக் கொண்டு ஆண்டு வந்தனர் எனக் கோடல் பொருந்தும். நமது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த இம்மரபரசருள் ‘மலையமான் பெரிய இராசராசச் சேதியராயன் ஒருவன்; ‘மலையமான் நரசிம்மவர்மன் கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்’ மற்றொருவன். இவருள்முதல்வற்குச்சேனை மீகாமன் என்ற சிறப்புப் பெயர் இருந்தது[2]. இதனால் சோழர் படைக்குச் சிறப்புடைத் தலைவனாக இவன் இருந்தான் என்பது தெரிகிறது. பின்னவன், இரண்டாம் ராசாதிராசன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவ ராயனுடன் பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டு ஈழப்படையை வென்றவன் ஆவன். இவ்விருவரன்றி, ‘மலையமான் சூரியன் நீறேற்றான் இராசராச கோவல ராயன்’ என்பவனும் மலை நாட்டுச் சிற்றரசனாக இருந்தனன் என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது

சாம்புவராயர் :இவர்கள் பழைய பல்லவர் மரபினர்; வட ஆர்க்கர்டு, தென் ஆர்க்காடு கோட்டங்களைச் சோழர் அரசாங்கப் பொறுப்பாளராக இருந்து ஆண்டவர்கள் குடியினர். இவர்கள் நாளடைவிற் சிற்றரசராகிப் பொறுப்புடன் நாடுகளை ஆளலாயினர்


  1. S.I.I.Vol. 7, No.863
  2. Ibid No.890
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/318&oldid=493943" இலிருந்து மீள்விக்கப்பட்டது